நடிகை அனிகா இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் உருவான ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தமிழ் முன்னணி நடிகரான அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா.
இந்த படத்தில் சிறப்பாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய அனிக்காவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. நானும் ரவுடிதான், மிருதன் போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு மீண்டும் அஜித்தின் மகளாக ‘விசுவாசம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு மாமனிதன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அனிகா.
குறுகிய காலத்தில் இளம் நடிகைகளின் ஒருவராக தற்சமயம் அணிக்காக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அணிகா தற்சமயம் மலையாள திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நிறைய முத்த காட்சிகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதால் நிறைய ரசிகர்கள் அனிகாவை பார்த்து நிறைய கேள்விகளை கேட்டு வருகிறார்கள். வாய்ப்பிற்காக இப்படியா நடிப்பது அஜித்தின் மகள் இவள் தானா என்றெல்லாம் திட்டி வருகின்றனர்.
முதல் படத்திலேயே இவ்வளவு கிளாமரா நடித்திருக்கும் அனிகாவிற்கு நிறைய ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அனிகா சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.தற்சமயம் அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் அவர் கேஷுவல் லுக் ஆக சாரி அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது சமூக வலைதளங்களை தனது கோட்டை ஆக்கி உள்ளார் அனிகா சுரேந்திரன்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.