படக்குழுவே அதிர்ச்சி ஆயிட்டோம்..ரஜினிக்கு என்ன நடந்தது? உண்மையை விளக்கிய லோகேஷ் கனகராஜ்..!

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற தமிழ் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதிகபட்சம் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.

இதனாலேயே இப்பொழுதும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு தற்சமயம் அடுத்து கூலி திரைப்படத்தில் நடிக்க துவங்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.

படக்குழுவே அதிர்ச்சி ஆயிட்டோம்

இதற்கு நடுவே சமீபத்தில்தான் வேட்டையின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தது. அதிலிலும் வந்து நல்லபடியாக பேசியிருந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் திடீரென்று மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏதோ ஒரு சின்ன சிகிச்சை ஒன்று செய்ய வேண்டி இருந்ததாக கூறப்பட்டது. இந்த சிகிச்சை முடிந்த நிலையில் தற்சமயம் வீடு திரும்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.

உண்மையில் என்ன நடந்தது

ஆனால் இதற்குள்ளாக ஏகப்பட்ட சர்ச்சைகள் ரஜினியின் உடல்நிலை குறித்து வெளியில் பரவத் துவங்கியது. முக்கியமாக கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடினமான காட்சிகளை ரஜினிகாந்துக்கு வைத்தது தான் அவரது உடல்நிலை மோசமாவதற்கு காரணமாக அமைந்தது என்று ஒரு பக்கம் வதந்திகள் கிளம்பின.

இந்த நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் தற்சமயம் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது 40 நாட்களுக்கு முன்பே ரஜினிகாந்த் தனக்கு இப்படி ஒரு சிகிச்சை செய்யப்பட இருப்பதை எங்களிடம் தெரிவித்திருந்தார்.

உண்மையை விளக்கிய லோகேஷ் கனகராஜ்

அதற்கு ஏற்றார் போல நாங்கள் போன மாதம் 20ஆம் தேதிக்குள்ளாகவே அவருக்கான படப்பிடிப்பு வேலையை முடித்து அவரை அனுப்பி வைத்து விட்டோம். அதன் பிறகுதான் இந்த சிகிச்சை நடந்தது. ஆனால் அதை சமூக வலைதளங்களில் மாற்றி கூறியிருக்கின்றனர்.

ரஜினி சாரின் உடல் நிலையை விட ஒரு திரைப்படம் எங்களுக்கு முக்கியம் கிடையாது. சன் பிக்சர்ஸ் மாதிரியான ஒரு பெரிய நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்கும் பொழுது அவரது உடல் நிலையை எப்படி கருத்தில் கொள்ளாமல் இருப்பார்கள்.

இந்த நிலையில் இவர்கள் நிறைய ரஜினியை பற்றி தவறான செய்திகளை பரப்பியது எங்களுக்கு அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ரஜினி சாரை ஊருக்கு அனுப்பிவிட்டு நாங்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திக் கொண்டுதான் இருந்தோம் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version