அடக்குமுறை பற்றி பேசினா தப்பா? லப்பர் பந்து மாமியார் அதிரடி.. அவர் படத்துல முற்போக்கு சிந்தனை கம்மி!

தமிழ் திரைகளுக்கு சமீப காலமாக சின்ன பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய எதிர்பாராத வெற்றியை தருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறியது.

அந்த வரிசையில் அண்மையில் வெளி வந்த லப்பர் பந்து திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வசூலை வாரி எடுத்தது.

அடக்குமுறை பற்றி பேசினா தப்பா?

இந்தப் படத்தில் மாமியார் மருமகள் இடையே இருக்கும் உறவானது மிகவும் சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் படத்தில் மாமியாராக நடித்த கீதா அதிரடியாக பேசிய பேட்டி ஒன்றில் அடக்குமுறை பற்றி பேசினால் என்ன தவறு என்ற கேள்வியை வைத்திருக்கிறார்.

மேலும் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்து விட்டு தான் இந்தப் படத்தில் நடிக்க தன்னை அழைத்தார்கள். மேலும் இந்த படத்தில் அவர்கள் சொன்ன கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அண்மை காலமாக சாதிய அடிப்படையில் படங்கள் பல வெளி வந்து ரசிகர்களின் மனதில் வேண்டாத விஷயங்களை விதைக்கிறதா? என்று கேட்கக் கூடிய வகையில் சில இயக்குனர்களின் படங்கள் முத்திரை குத்தப்பட்டு வருகிறது.

லப்பர் பந்து மாமியார் அதிரடி..

அப்படிப்பட்ட படங்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். லப்பர் பந்து மாமியார் கீதா அதிரடியாக பேசியதோடு மட்டுமல்லாமல் அந்தக் காலத்தில் இருந்து இந்த காலம் வரை பெண்மையை ஒரு போதை வஸ்துவாக சித்தரிக்க கூடிய படங்கள் பற்றி பேசி இருந்தார்.

மேலும் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது. பெண் சுதந்திரம் பற்றி இயக்குனர் பாலச்சந்தர் கூட அவ்வளவு விரிவாக தன் படங்களில் பெண்களை காட்டவில்லை என்பதை ஓபன் ஆக சொல்லிவிட்டார்.

பெண்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் சில படங்களை பாலச்சந்தர் இயக்க இருந்தாலும் அவற்றில் பெரும்பாலான படங்களில் ஆண்களுக்கு அடி பணிந்து போகின்ற வகையிலும் கடைசி வரை கஷ்டப்படக்கூடிய பெண்ணாகவும் தான் அவர்களை காட்டியிருப்பார்.

அவர் படத்துல முற்போக்கு சிந்தனை கம்மி..

எனவே அந்தக் காலத்தில் பெருமை பற்றிய முற்போக்கு சிந்தனை மிகவும் கம்மியாக இருந்த சமயத்தில் பாலச்சந்தர் அதனை தன் படங்களில் வெளிப்படுத்தி இருந்தாலும் அதுவே மிக மிக குறைவான அளவு தான் அவர் வெளிப்படுத்தியதாக சொல்லி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

பொதுவாகவே பாலச்சந்தர் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற கேரக்டர் ரோல்கள் இருக்கும். எனினும் அவர் பெண் சுதந்திரம் பற்றி தனது படங்களில் பெரிய அளவு வெளிப்படுத்தவில்லை என்று சொல்லி ரசிகர்களின் சிந்தனையை தூண்டி விட்டிருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. எனவே லப்பர் பந்து மாமியார் பேசிய பேச்சில் சில உண்மைகள் உள்ளது என்று சில பெண்கள் ஆமோதித்து வருகிறார்கள்.

மேலும் இனிவரும் காலங்களிலாவது பெண்கள் பற்றிய மாய வலையில் இருந்து விலகி அவர்களுக்கு உரிய அனைத்தும் கிடைக்க வேண்டும். மேலும் திரைத்துறையில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் இத்யாதி விஷயங்கள் இல்லாமல் செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி வருங்கால நடிகைகள் முயற்சி செய்ய வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version