லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரபல மலையாள நடிகை சுவாசிக்க தமிழில் ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். லப்பர் பந்து திரைப்படத்தில் யசோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பையும் அறிமுகத்தையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அந்த அளவுக்கு லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்திருக்கிறது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று பேசிய அவர், நான் பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வந்தேன்.
ஆனால், நான் நடித்த படங்கள் எதுவுமே எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை. லப்பர் பந்து திரைப்படம் தான் எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
உண்மையை சொல்லப்போனால் இது என்னுடைய இரண்டாவது ரவுண்டு என்று கூறியிருந்தார் நடிகை சுவாசிகா. தொடர்ந்து லப்பர் பந்து படத்தில் நடித்த அனுபவத்தை பேசிய அவர் மலையாளத்தில் கூட எனக்கு இவ்வளவு வலுவான ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லை.
தமிழில் தான் கிடைக்க வேண்டும் என இருந்திருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு ஒரு சவாலான விஷயம். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் நான் என்னுடைய மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வருடம் பேசிக் கொண்டிருப்பேன் அந்த காட்சியில் ஒரு மாடு என்னுடைய கையை நக்குவது போன்று படமாக்கப்பட்டு இருக்கும்.
அது நிஜமாகவே நடந்த விஷயம். அப்போது நான் மிரண்டு போய்விட்டேன். ஆனால், அந்த பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த காட்சியில் நடித்து முடித்தேன்.
படத்தில் காட்சியாக பார்க்கும்போது மிகவும் எதார்த்தமாக அந்த காட்சி வந்திருந்தது. ஒரு நிமிடம் நான் பயந்து போய் அந்த காட்சியில் என்னுடைய பயத்தை வெளிப்படுத்தி இருந்தால் அந்த காட்சியை நீக்கப்பட்டு இருக்கும். புதிதாக படமாக்கி இருப்பார்கள்.
ஆனால், பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அந்த காட்சியில் நடித்து முடித்தது அவ்வளவு இயற்கையாக.. உண்மைக்கு நெருக்கமாக.. அந்த காட்சி வந்திருந்தது என பேசி இருக்கிறார் நடிகை சுவாசிகா.