அட.. கொடுமையே புகைந்த அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம் ! கைதாகும் லப்பர் பந்து நடிகை..

கேரள திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகையே புரட்டி போட்ட ஹேமா கமிஷன் திரை உலகில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்கள் குறித்து அதிகளவு விஷயங்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

மேலும் கேரளா திரையுலகமே குறிப்பிட்ட பத்து நடிகர்களின் ஆளுமையில் கட்டுண்டு கிடப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் யாரை எந்த படத்தில் நடிக்க சொல்கிறார்களோ அவர்கள் தான் அந்த படத்தின் நாயகிகளாக விளங்குவார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளி வந்து அனைவரையும் பீதியில் தள்ளியது.

புகைந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்..

ஹேமா கமிஷன் வெளி வந்த பிறகு ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த மீடு புகார் பற்றியும் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றியும் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை வெளியே தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.

இதில் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்றாலும் படம் நன்றாக இருந்தால் அதுவும் கதை அம்சம் சிறப்பாக இருந்தால் நிச்சயமாக ரசிகர்கள் படத்தை வெற்றி பெறச் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாக லப்பர் பந்து திரைப்படம் விளங்கியது.

இந்த திரைப்படமானது முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் மாசான வசூலை செய்து காட்டியதை அடுத்து இந்த படம் குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை செய்து இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் இந்த படத்தில் நடித்த நடிகை சுவாசிகா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வைகை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் தொலைக்காட்சி தொடரான தத்து புத்தியில் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்ட இவர் கோரிப்பாளையம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் அண்மையில் லப்பர் பந்து திரைப்படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

மேலும் அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரத்தை பொருத்த வரை வாய்ப்புகள் வேண்டாம் என்றால் நாம் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டாம் என்று விளக்கிச் செல்ல வேண்டும். அதை விடுத்து இது போல நடப்பது தவறு என்று பலர் பல்வேறு வகையான கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்.

கைதாகும் லப்பர் பந்து நடிகை..

இந்நிலையில் அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரத்தால் கேரளா போலீசாரால் நடிகை சுவாசிகா நடிகர் மனோஜ் மற்றும் மீனா ஆன்டனி சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கக்கூடிய சமயத்தில் பெண்களை இழிவு படுத்தக்கூடிய வகையில் பேசி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து பெண்களை அவதூறாக பேசுதல் என்ற வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு சரியான பதில் அளிக்காத நிலையில் இவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக வெளிவந்துள்ளது.

இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரோடு வாயால் எப்படி கெட்டுப் போக வேண்டுமா? என்ற ரீதியில் அனைவரும் இந்த விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam