நடிகை பானுப்பிரியா தன்னுடைய மார்க்கெட்டை எப்படி இழந்தார். அதற்கு என்ன காரணம்..? என்று பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவீஸ் பாஸ்கரின் மகன் திரு.பாலாஜி பிரபு அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியுள்ள விஷயம் முற்றிலும் புதுமையாகவும் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. அவர் கூறியதாவது, நடிகர் கார்த்திக் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தார். படங்களில் நடிப்பதை பெரிய சிரமம் போல உணர ஆரம்பித்து விட்டார்.
ஆனாலும். பணத்திற்கும் ஆசைப்பட்டார். இதனால் தன்னை சந்தித்து கதை சொல்லக் கூடியவர்களிடம் கதையை ஒப்புக்கொண்டு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு படப்பிடிப்பு செல்லாமல் டிம்மிக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்.
கூலுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை.. என்பது போல அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. இப்படி இல்லாமல் நடிகர் கார்த்தி முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி இருந்தார் என்றால் இன்று அவருடைய உயரம் என்று எட்ட முடியாத அளவில் இருந்திருக்கும்.
அந்த அளவுக்கு மிகப்பெரிய ஒரு நடிகராக இருந்தார் கார்த்திக். ஆனால், மேயிற மாட்டை.. நக்குற மாடு கெடுத்த கணக்காக நடிகை பானுப்பிரியாவின் திரை வாழ்க்கையும் சேர்த்து கொடுத்தவ புண்ணியவான் நடிகர் கார்த்திக் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய அப்பா தயாரித்த சக்கரவர்த்தி என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது நான் ஷூட்டிங் செல்லவில்லை.. நீயும் போகாத என பானுப்ரியாவிடம் படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல வேண்டாம் என்று கார்த்திக் கூறியிருக்கிறார் போல தெரிகிறது. உண்மையாக. அவர் என்ன கூறினார் என்று தெரியவில்லை.
ஆனால், அதை கேட்ட பானுப்பிரியா நிஜமாகவே படப்பிடிப்பு தளத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்தார். எங்கே ஹீரோயின் வரவில்லை என்று அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று என்னுடைய அப்பா விசாரித்தார்.
அப்போது, நீங்கள் முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் நடிப்பேன் என கூறியிருக்கிறார் பானுப்ரியா. என்ன காரணம்..? சினிமாவில் ஒவ்வொரு ஸ்கெட்யூல் முடியும்போதும் அதுக்கு ஏற்றார் போல தானே பணம் கொடுப்பார்கள். நீங்கள் என்ன இப்போதே சம்பளத்தை முழுவதுமாக கேட்கிறீர்கள். சினிமாவுல தான இருக்கீங்க.. சினிமா நடைமுறை இது தான் என உங்களுக்கு தெரியாதா..? என்று என்னுடைய அப்பா கேட்டிருக்கிறார்.
அப்போது பானுப்பிரியா ஏதோ என்னுடைய அப்பா மனம் புண்படும்படி பேசியிருக்கிறார். குறிப்பாக உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று வார்த்தை விட்டிருக்கிறார். அதனால், முழு பணத்தையும் கொடுத்தால் தான் நான் படத்தில் நடித்துக் கொடுப்பேன் என கூறியிருக்கிறார்.
பாதி படம் தான் முடிஞ்சிருக்கு.. முழு பணத்தை கொடுத்தால் தான் நடிப்பீர்களா..? நான் எத்தனை படம் பண்ணியிருக்கேன்.. எத்தனை நடிகர்களை பார்த்திருக்கேன்.. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? சரிம்மா.. என்று சொல்லி கிளம்பி வந்து விட்டார் என்னுடைய அப்பா.
அந்த படத்திற்கு பானுப்பிரியாவுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தை முன் பணமாக வாங்கி இருந்தார். மீதி இருக்கக்கூடிய 3 லட்ச ரூபாயை பானுப்பிரியா பெயருக்கு DD எடுத்திருக்கிறார்.
ஆனால், அதை பானுப்பிரியாவிடம் கொடுக்காமல் நேரடியாக தயாரிப்பாளர் சங்கத்தில் சென்று கொடுத்துவிட்டார். இதுபோல, பானுப்பிரியா என்ற நடிகை முழுவதுமாக பணத்தை கொடுத்தால் தான் நடிப்பேன் என்று என்னிடம் கூறியிருக்கிறார்.
ஒரு முதலாளியை தொழிலாளியான பானுப்ரியா நம்பவில்லை. ஒரு முதலாளியை நம்பாத பானுப்பிரியாவை.. நான் எப்படி நம்புவது..? அதனால் தயாரிப்பாளர் சங்கம் முன்னின்று இந்த பிரச்சனையை எனக்கு தீர்த்து வைக்க வேண்டும்.
இந்த DDயை தயாரிப்பாளர் சங்கத்தில் நான் ஒப்படைத்து விடுகிறேன். என்னுடைய படத்தின் வேலைகள் முடிந்து நான் NOC கொடுத்த பிறகு பிறகு தயாரிப்பாளர் சங்கம் பானுப்பிரியாவுக்கு இந்த DD-யை கொடுத்து விடலாம்.
பானுப்பிரியா நடித்த முடித்து டப்பிங் எல்லாம் முடித்த பிறகு தான் நான் N.O.C கடிதம் கொடுப்பேன். அந்த கடிதத்தை பானுப்பிரியா கொண்டு வந்தால் மட்டுமே நீங்கள் இந்த DDயை பானுப்பிரியாவுக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு லாக் வைத்து விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத பானுப்பிரியா மிரண்டு போனார். என்னுடைய அப்பாவுக்கு போன் செய்து தெரியாமல் பேசி விட்டேன். எனக்கு நீங்கள் கொடுப்பதாக சொன்ன ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கொடுங்கள். படம் முடிந்த பிறகு நான் மீதி பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று கெஞ்சினார்.
அப்போது, என்னுடைய அப்பா.. நடந்ததை இனிமேல் மாற்ற முடியாது. என்னுடைய படத்தின் நடித்து முடித்துவிட்டு உங்களுடைய சம்பளத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
அப்போது தயாரிப்பாளர் மத்தியில் பானுப்பிரியாவுக்கு மிகப்பெரிய கெட்டப்பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு வருடத்திற்கு 10 படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பானுப்பிரியா. 1993க்கு பிறகு வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் மட்டுமே நடித்தார். அதுவும் அவருக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் கிடைத்த வாய்ப்புகள்.
அதன் பிறகு பானுப்பிரியா சினிமா வாழ்க்கை இறங்கு முகமாகிவிட்டது. பானுப்பிரியாவின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்பது என் அப்பாவின் நோக்கமல்ல. தன்னுடைய முதலீட்டை காப்பாற்றவே என் அப்பா அப்படி செய்தார். நடிகர் கார்த்திக்கின் பேச்சை கேட்டதால் தான் பானுப்பிரியாவிற்கு இந்த நிலைமை என்று கூறியுள்ளார் ஆஸ்கார்ஸ் மூவிஸ் உரிமையாளர் திரு.பாலாஜி பிரபு அவர்கள்.
Summary in English : In a recent interview, M. Bhaskar’s son opened up about the rise and fall of actress Banupriya, shedding some light on what led to her decline in the industry. He shared that while Banupriya was once a household name, known for her incredible talent and charm, things took a turn when she faced some tough personal challenges.