கடந்த 2012 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நடிகர் விஷாலின் மத கஜ ராஜா திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்தது. ஆனால், கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
பொங்கல் ரேசிலிருந்து நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் விலகிவிட தொடர்ச்சியாக 10,12 படங்கள் மேல் தங்களுடைய ரிலீஸை உங்கள் தேதியை அறிவித்தனர்.
ஏனென்றால், தமிழில் நேரடியாக வணங்கான் திரைப்படம் தவிர வேறு எந்த பெரிய நடிகரின் படமும் பொங்கலுக்கு வரவில்லை. மேலும், தொடர்ச்சியாக 10 நாள் இருப்பதால் இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.
சினிமா விரும்பி களுக்கு இந்த பொங்கல் விடுமுறை ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஷாலின் மதகஜராஜா திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் பலரும் குஷியாகி விட்டார்கள்.
நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது வெளியாக வேண்டிய படம்.. நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது.. என தங்களுடைய பழைய நினைவுகளை அசைபோடுவதன் மூலம் இந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரமோஷன் செய்து விட்டார்கள் சமூகவலைதள வாசிகள்.
மட்டுமில்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு தற்போது கூடியிருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக கூடிய படம்.. வரவேற்பு எப்படி இருக்குமா என்று பயந்தேன்.. ஆனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எங்களை சர்ப்ரைஸ் ஆக்கிவிட்டது என்று இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி பேசியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்று இந்த படத்தின் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷால் படம் குறித்தான பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால், அதை எல்லாம் தாண்டி ரசிகர்கள் பலரும் கவனித்தது நடிகர் விஷாலின் உடல் நிலையை தான்.
மிகவும் மோசமான உடல் நிலையில் நடிகர் விஷால் காணப்பட்டார். மைக்கை பிடிப்பதற்கு கூட அவரால் முடியவில்லை. மிகவும் கை நடுக்கத்துடன் காணப்பட்டார் நடிகர் விஷால்.
இதனை பார்த்த ரசிகர்கள் இதனை பார்ப்பதற்கு கொடுமையாக இருக்கிறது. சும்மா கல்லு மாதிரி இருந்த மனுஷன் விஷால்.. இவரை இப்படி ஒரு கோலத்தில் பார்க்க வேண்டுமா..? இது என்ன கொடுமை..? இவருக்கு என்ன ஆனது..? இவர் விரைவில் பூரண நலம் பெற்று வர வேண்டும் என்று தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஷாலுக்கு என்ன ஆனது..? எதனால் இவருடைய கை எப்படி நடுங்குகிறது என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் ரத்னம் படப்பிடிப்பில் நடக்காத ஒன்றை நடந்ததாக நினைத்துக் கொண்டு படக்குழுவில் இருந்தவர்களிடம் சண்டை போட்டார்.. திடீர் திடீரென கோபமாகிறார்.. திடீர் திடீரென சாந்த மாகிறார்.. திடீரென யாருடனும் பேசமால் அமைதியாக அமர்ந்து விடுகிறார்.. இவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
அதன் தொடர்ச்சியாக, தற்போது உடல்நிலை மோசமாகி தன்னுடைய பழைய நடை உடை பாவனை எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு வயதான முதியவர் போன்று நடை உடை பாவனையுடன காணப்படுகிறார் விஷால்.
மட்டுமில்லாமல் அவருடைய கைகள் நடுங்குவதை பார்த்து ரசிகர்கள் உள்ளபடியே மிகுந்த கஷ்டமான மனநிலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
இது குறித்து விசாரித்த போது.. நடிகர் விஷாலுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்றும் அதன் காரணமாகத்தான் இவர் எப்படி இவருக்கு இப்படி உடல் நிலை இருக்கிறது.அதற்கான முறையான சிகிச்சைகளை விஷால் மேற்கொண்டு வருகிறார் விரைவில் இது குணமாகிவிடும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.
Summary in English : At the recent Madha Gaja Raja audio launch event, fans noticed something a bit off with Vishal – his hand was shivering. It turns out, this wasn’t just a random occurrence; he was dealing with a minor nerve infection. While it might sound alarming, these kinds of infections can affect muscle control and coordination temporarily.