கோடிகளில் புரளும் சினிமா சமையல்காரர்.. மாதம்பட்டி ரங்கராஜின் தெரியாத பக்கங்கள்..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தற்சமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் வெகு காலங்களாகவே தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் ஒரு பிரபலமான சமையல்காரராக இருந்து வருகிறார்.

தமிழ் பிரபலங்களின் திருமணங்களில் துவங்கி அரசியல் பிரமுகர்களின் திருமணங்கள் வரை அனைத்திலும் சமைத்து கொடுப்பவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். இப்படி மாதம்பட்டி ரங்கராஜ் பெரிய உயரத்தை தொடுவதற்கு எது காரணமாக இருந்தது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

madhampatty rangaraj 4

சினிமா சமையல்காரன்

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவராவார் சிறுவயதில் அவரது தந்தை கஷ்டப்பட்டு கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருக்கு விறகு கொண்டு வந்து கொடுக்கும் வேலையைதான் மாதம்பட்டி ரங்கராஜ் பார்த்து வந்தார்.

அவரது தந்தையான மாதம்பட்டி தங்கவேலு தொடர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்து ஒரு வழியாக திருமண ஆர்டர்களை எடுத்து செய்யும் ஒரு சமையல்காரராக மாறி இருந்தார். ஆனால் சமையல் வேலை என்பது மிகவும் கடினமானதாக இருந்ததால் தனது மகனை படித்து வேறு துறைக்கு செல்லும்படி வலியுறுத்தினார் மாதம்பட்டி தங்கவேலு.

மாதம்பட்டி ரங்கராஜ்

அதன்படி மாதம்பட்டி ரங்கராஜும் பள்ளி படிப்பை முடித்த பிறகு கல்லூரியில் சென்று படித்துக் கொண்டிருந்தார். அனிமேஷன் மாதிரியான துறைகளின் மீது அவரது ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அவரை அழைத்த அவரது தந்தை தனது தொழிலை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும்.

தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று கூறினார். இதனை அறிந்த மாதம்பட்டி ரங்கராஜ் தான் படித்துக் கொண்டிருந்த படிப்பை விட்டுவிட்டு வேகமாக சென்று கேட்டரிங் படிக்க துவங்கினார். அதன் மூலம் நிறைய ட்ரைனிங் சென்றார்.

madhampatty rangaraj 3

 

அதன்பிறகு எம்.பி.ஏ படித்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த கேட்டரிங் தொழிலை ஒரு வணிகமாக எப்படி கொண்டு செல்வது என்பதை அதன் மூலம் கற்றுக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். அதனை தொடர்ந்து தன்னுடைய கேட்டரிங் சர்வீஸை வேற லெவலுக்கு அவர் எடுத்துச் சென்றார்.

தெரியாத பக்கங்கள்

அதில் ஆரம்ப கட்டமாக சமையல் துறையை ஒரு மதிப்புக்குரிய வேலையாக மாற்ற வேண்டும் என்று கூறி அவர் உருவாக்கிய உணவகங்களில் சமைக்கும் இடங்களில் ஏசியை போட்டார். அதேபோல அங்கு உள்ள ஊழியர்கள் எளிதாக வேலை பார்ப்பதற்காக காய்கறி வெட்டுவதில் இருந்து அனைத்து விஷயங்களுக்கும் அதற்கான கருவிகளை கொண்டு வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.

மேலும் திருமண விசேஷங்களுக்கு சமைக்கும் பொழுது அங்கு டிஷ்யூ பேப்பர் கொடுப்பதற்கு கூட ஆட்களை நியமித்தார் மாதம்பட்டி ரங்கராஜ் சின்னவகை கல்யாணமாக இருந்தாலும் சரி பெரிய வகை திருமணமாக இருந்தாலும் சரி அதில் மாதம்பட்டி ரங்கராஜின் மெனு என்பது மிகச் சிறப்பானதாக இருக்கும்.

madhampatty rangaraj 2

பெரிய திருமணங்களில் 30 கிராம் ஸ்வீட் வைக்க வேண்டிய நிலை இருந்தால் அதே ஸ்வீட்டை 10 கிராம் வைத்து சின்ன திருமணத்திலும் பல உணவுகளை வழங்கக்கூடியவராக மாதம்பட்டி இருந்தார். தொடர்ந்து ஸ்டார் ஹோட்டல் தரத்தில் உணவுகளை வழங்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

இப்படி கேட்டரிங் துறையில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தம் தான் மாதம்பட்டி ரங்கராஜை தனித்துவமானவராக ஆக்கியது. இப்பொழுது தனியாக ஒரு ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்று கனவு காணும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam