விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுக்கு பிறகு மிகப்பிரபலமான ஒரு தொகுப்பாளராக இருந்து வருபவர் மாகாபா ஆனந்த். விஜய் டிவியை தாண்டி தமிழகம் முழுவதுமே இவருக்கு நல்ல வரவேற்பு உண்டு.
எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக மாகாபா அழைக்கப்படுவது உண்டு சொல்ல போனால் விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்கள் பலருமே இப்படி வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்வதன் மூலமாகதான் அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்.
வழக்கில் சிக்கிய மாகாபா ஆனந்த்
விஜய் டிவியின் மூலமாக சம்பாதிக்கும் பணத்தோடு ஒப்பிடும் பொழுது இப்படி வெளியில் இருந்து வரும் தொகைதான் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த மாதிரி மாகாபா ஆனந்தும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வாடிக்கையான ஒரு விஷயமாகதான் இருந்து வந்தது.
ஆனால் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இது பார்க்க ஆனந்திற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஹாப்பி ஸ்ட்ரீட் என்கிற நிகழ்ச்சி ஒன்று திருச்சியில் சமீபத்தில் நடத்தப்பட்டது.
எப்படி வந்து மாட்டிருக்கேன் பாருங்க
பொதுவாகவே சென்னை மாதிரியான நிறைய மாநகராட்சிகளில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு. மக்களின் பொழுது போக்கிற்காகவும் மனநிலை மாற்றத்திற்காகவும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு.
ஆனால் அதற்கு சரியான அனுமதி வாங்கி நடத்த வேண்டும் என்பது முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் உள்ள அரியமங்கலம் பகுதியிலும் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இடியாய் இறங்கிய செய்தி
அதன் காரணமாக நிறைய நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்றன. முக்கியமாக தெருக்களில்தான் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு தான் சிறப்பு விருந்தினராக மாகாபா ஆனந்த் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் சென்று அங்கு நிறைய விஷயங்களை பேசி இருந்தால் நிறைய காமெடிகள் செய்திருந்தார்.
மிகவும் மகிழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி சென்றது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்கு சரியான அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இந்த நிகழ்ச்சி ஒரு மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சி என்று கூறி அனுமதியை வாங்கி இருக்கின்றனர்.
பிறகு அனுமதி வாங்கிய பிறகு நிகழ்ச்சி முழுக்க முழுக்க கேளிக்கையான ஒரு நிகழ்ச்சியாக நடந்திருக்கிறது இதனை அடுத்து இந்த நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதும் அதில் கலந்து கொண்ட மாகாபா ஆனந்த் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.