MAKKAMISHI : இளம் பாடகர் பால் டப்பா சமீப காலமாக உருவாக்கக்கூடிய பாடல்கள் அனைத்தும் இளவட்டங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன.
இவருடைய உண்மையான பெயர் அனிஷ் என்பதாகும். தற்போது பிக்பாஸ் 8-வது சீசனின் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து வெளியாகி இருக்கின்றன.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரதர் திரைப்படத்தில் மக்காமிஷி என்ற ஒரு பாடலை பாடி இருக்கிறார் பால் டப்பா.
இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து இருக்கிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாடகர் பால் டப்பாவிடம் மக்காமிஷி என்றால் என்ன..? அதற்கு உண்மையான அர்த்தம் என்ன..? அந்த வார்த்தையை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பால் டப்பா.. இதற்கு பால் டப்பா கொடுத்த பதிலை கேட்டு ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள் ரசிகர்கள்.
ஏனென்றால், இந்த பாடலிலேயே மக்காமிஷி என்றால் என்ன..? என்று கதாநாயகன் கேட்பது போலவும் அதற்கு பாடகர் பதிலளிப்பது போலவும் சில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
அதன்படி மக்காமிஷி என்றால் மாஸ்.. கெத்து.. என்று பாடலில் கூறியிருப்பார் பால் டப்பா. ஆனால், பேட்டியில் அவர் அப்படியே வேறு ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார்.
அதாவது, இவருடைய நண்பரும் ஒரு ராப் பாடகர் என்றும் அவருடைய பாடலில் இருந்து தான் இந்த வார்த்தையை நான் எடுத்தேன் என்றும் கூறியுள்ளார்.
உண்மையாக அவருடைய பாடலில் ஒர்க் அவுட் மிசின் என்றுதான் அந்த வார்த்தையை பாடியிருப்பார். ஆனால், பாடலை திரும்பத் திரும்ப கேட்கும் போது ஒர்க் அவுட் மிசின் என்பது மக்காமிஷி என்று நமக்கு பழகிவிடும்.
அந்த தொணியில் தான் பாடி இருப்பார். அந்த வார்த்தையை எடுத்து நான் அப்படியே பாடலில் பயன்படுத்திக் கொண்டேன் என பேசி இருக்கிறார் பால் டப்பா.