நடிகை மாளவிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் திருட்டு பயலே திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தீர்கள்.. அதிலும் குறிப்பாக படுக்கை அறை காட்சிகளில் நடித்து இருந்தீர்கள்.. இது குறித்து உங்களுடைய பார்வை என்ன என்று கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை மாளவிகா நான் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார்கள். நான் அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்தேன்.
அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு உண்டான இடம் நிறைய இருந்தது. ஹீரோயின் என்றால் கூட ஹீரோக்கு அட்வைஸ் செய்வது அவருடன் நான்கு பாடல்களில் நடனமாடுவது போன்ற காட்சிகள் தான் இருக்கும். கதையில் ஹீரோயின்களுக்கு பெரிய பங்கு எதுவும் இருக்காது.
ஆனால், திருட்டு பயலே கதையில் வில்லிக்கு மிகப்பெரிய பங்கு இருந்தது. கதை முழுதும் பயணிக்க கூடிய கதாபாத்திரமாக இருந்தது. அதனால் அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்தேன்.
அதன்பிறகு படுக்கையறை காட்சி பற்றி கூறினால்.. எனக்கு எப்போதுமே படுக்கையறை காட்சிகள் நடிப்பது என்பது சங்கடமான ஒரு விஷயம் தான். ஆனால், அப்பாஸ் உடன் நடிப்பது எளிமையாக இருந்தது.
ஏனென்றால், அப்பாஸ் எனக்கு மிக நெருங்கிய நண்பர். அவரும் நானும் நிறைய பார்ட்டிகளுக்கு சென்றிருக்கிறோம். நிறைய கொண்டாட்டங்களில் ஒன்றாக கலந்து கொண்டு வந்திருக்கிறோம்.
அதனால் அவருடன் படுக்கையறை காட்சிகள் நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை. அவருடன் எப்போது படுக்கையறை காட்சிகள் நடிக்க சொன்னாலும் அது எனக்கு வசதியாக தான் இருக்கும்.
மற்றபடி புதுமுக நடிகர்கள் அல்லது நான் புதிதாக சந்திக்கக்கூடிய நடிகர்கள் அவர்களுடன் படுக்கையறை காட்சிகள் நடிக்கும் போது நிஜமாகவே மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தான் நான் இருப்பேன் என பதிவு செய்திருக்கிறார் நடிகை மாளவிகா.