மூன்றாண்டுகள் விடாமல் செய்த காதல்… கைகூடிய மஞ்சிமா, கௌதம் கார்த்திக் திருமணம்… ட்ரெண்டிங் புகைப்படங்கள்….!!

 திரை உலகை பொறுத்தவரை தங்களோடு இணைந்து நடித்த நடிகைகளை காதலித்து கரம் பிடித்தவர்களின் வரிசையில் தற்போது  கார்த்திக்கின் மகனாகிய கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இணைந்திருக்கிறார்கள்.

 ஏற்கனவே அந்த வரிசையில் அஜித் ஷாலினி ,சூர்யா ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், பிரசன்னா சினேகா இப்படி பல ஜோடிகள் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் நடிகர்களின் வரிசையில் இருக்கக்கூடிய வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் மூன்று ஆண்டுகளாக மஞ்சிமா மோகனை காதலித்திருக்கிறார்.

இதனை அடுத்து  பெரியவர்கள்   ஆசிர்வாதத்துடனும், இரு இல்ல சம்மதத்தோடு இவர்கள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் என்ற திரைப்படத்தில் மஞ்சிமா , கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 ஆரம்பத்தில் எப்போதும் போல் நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும் காதலர்களாக அதன் பின் மாறினார்கள். இவர்கள் பற்றிய தகவல் அரசல் புரசலாக செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்த போதிலும் அதைப் பற்றி கவலைப்படாமல் எந்த ஒரு பதிலையும் கிசுகிசுகளுக்கு கொடுக்காமல் இருவரும் இருந்தனர்.

 இதனை அடுத்து இவர்கள் இருவரும் தாங்கள் இருவரும் காதல் ஜோடிகள் தான் என்ற அறிவிப்பை ரசிகர்கள் மத்தியில் அறிவித்ததை அடுத்து பரவி வந்த அந்த வதந்தி உண்மையானது.

 இதனை அடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நினைக்கும் வேளையில் திருமணத்துக்கான அறிவிப்பை இருவரும் சேர்ந்தே அறிவித்தார்கள். இந்த நிலையில் இவர்களது திருமணம் நல்லபடியாக முடிந்துள்ளது.

 மேலும் இந்த ஜோடியின் திருமண புகைப்படம் தற்போது மீடியாவில் ட்ரெண்டிங் வருகிறது.இந்த புகைப்படத்தில் கௌதம் கார்த்திக் மாப்பிள்ளைக்குரிய பட்டு வேட்டி சட்டையுடன் இருக்கிறார். அவருக்கு மேட்சிங் ஆக மஞ்சிமா மேகனும் சந்தன நிற புடவையில் கல்யாணப் பெண்ணாய் சூப்பராக ஜொலித்திருக்கிறார்.

இந்த நிகழ்வானது நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் கல்யாண போட்டோ தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. மேலும் இந்த திருமணத்தில் மணிரத்தினம், கௌதம் மேனன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ரம் பிரபு நேரில் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …