சொந்த மகளே ஒதுக்குனா என்ன பண்ண முடியும்… தனிமையில் தவிக்கும் மஞ்சு வாரியர்.. இதுதான் காரணமாம்?..

தற்சமயம் மலையாளம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் மஞ்சு வாரியார் பொதுவாக 40 வயதுக்குள் ஒரு நடிகை சினிமாவில் நடித்து வரவேற்பை பெற்றால்தான் உண்டு.

அதற்கு பிறகு அக்கா கதாபாத்திரமோ அல்லது அம்மா கதாபாத்திரமோதான் கிடைக்கும் என்பது பரவலான பேச்சாக இருந்து வருகிறது. அதனை உடைத்து 40 வயதுக்கு பிறகும் கூட ஒரு நடிகை கதாநாயகியாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை மஞ்சுவாரியார்.

சொந்த மகளே ஒதுக்குனா

இத்தனைக்கும்  பத்து வருட காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த போதும் கூட மீண்டும் சினிமாவில் வந்து தனக்கென தனி இடத்தை அவர் பிடித்திருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

தற்சமயம் இவர் தமிழ் சினிமாவிலும் முக்கியமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார். துணிவு, வேட்டையன் மாதிரியான படங்களில் நடித்ததன் மூலம் இப்பொழுது தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

தனிமையில் தவிக்கும் மஞ்சு வாரியர்

ஆனால் சொந்த வாழ்க்கை என்று பார்க்கும் பொழுது மஞ்சு வாரியரின் வாழ்க்கை மிக மோசமானதாக இருந்திருக்கிறது. திலீப் குமார் என்கிற பிரபலத்தை திருமணம் செய்த மஞ்சு வாரியர் அதற்குப் பிறகு சினிமாவை விட்டு வெளியேறி இருந்தார்.

ஆனால் திலீப் குமார் தனக்கு துரோகம் செய்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் கண்டறிந்த மஞ்சுவாரியர் அவரை விட்டு பிரிந்து வந்தார். இந்த நிலையில் மஞ்சு வாரியரின் மகளான மீனாட்சி திலிப்புக்கும் மஞ்சுவாரியருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

இதுதான் காரணமாம்?

இன்ஸ்டாகிராமில் கூட மீனாட்சி மஞ்சுவாரியரை பின்பற்றவில்லை ஆனால் மஞ்சு வாரியர் மீனாட்சியை பின்பற்றுகிறார். அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீனாட்சி சமீபத்தில் பட்டப் படிப்பை முடித்த மீனாட்சி  தன்னுடைய தந்தை திலீப் குமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தார்.

திரைத்துறையை சார்ந்த பலரும் அந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்தனர். ஆனால் மஞ்சுவாரியர் மட்டும் வாழ்த்துக்கள் கூறவில்லை எனவே மஞ்சுவாரியாரின் மகள் அவரை விட்டுவிட்டு தற்சமயம் அவருடைய தந்தையுடன் இருந்து வருகிறார் என்று தெரிகிறது இதனால் மஞ்சு வாரியார் மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam