பிரபல நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து லியோ வெற்றி விழாவில் பேசிய பேச்சுக்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பின.
லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய மன்சூர் அலிகான் லியோ படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் வில்லத்தனமான காட்சிகள் இருக்கும் திரிஷாவை படுக்கையில் தூக்கி போட்டு கற்பழிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அப்படி எந்த காட்சியும் இல்லை என தனக்கே உரிய பாணியில் காமெடியாக பேசி இருந்தார். இது அந்த நேரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய பேச்சை கண்டித்து தன்னுடைய பதிவை வெளியிட்டு இருந்தார். நடிகை திரிஷாவும் இது குறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த விவகாரம் நீடித்தது. உச்சகட்டமாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரும் அளவுக்கு இந்த விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் நடிகர் திரிஷா குறித்து சர்ச்சையான ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்சூர் அலிகானிடம் நீங்கள் த்ரிஷாவை பற்றி பேசும்போது அந்த விஷயம் பெரிய பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுவே நடிகர் தனுஷ் பற்றி நயன்தாரா பேசினால் எதுவும் பரபரப்பாக பேசப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். அப்போது மன்சூர் அலிகான்.. ஹே.. ஹே.. நான் எங்க பேசினேன்.. நான் பேசுனதை.. கட் பண்ணி வச்சி நாசம் பண்ணுனாங்க..
அதை மறக்க முடியலன்னு சொல்றியா.. அப்படினா நீ தனியா போயிடு.. இன்னும் கொஞ்ச நாள்ல திரிஷா அமைச்சராகிடுவாங்க.. அங்க போய் அவங்களுக்கு காரியதர்ஷியா நின்னுக்கோ.. என்று அங்கிருந்து பத்திரிகையாளர்களிடம் சீறியுள்ளார் மன்சூர் அலிகான்.
திரிஷா அமைச்சராகி விடுவார் என்று எந்த நோக்கத்தில் மன்சூர் அலிகான் கூறுகிறார். இதில் உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது.. அல்லது விளையாட்டாக கூறினேன் என்று கூறப் போகிறாரா..? என்று பேச்சுக்கள் இணைய பக்கங்களில் சர்ச்சையை கிளப்பிவருகிறது.