போதை வழக்கில் பிரபல நடிகர் மகன் கைது.. கோலிவுட்டில் தொற்றிய பரபரப்பு..

தமிழ் திரை உலகில் வில்லனாக வலம் வந்த மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்த தகவல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் தனது வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மூலம் வில்லனாக வலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் விளங்குகிறார். 

இந்நிலையில் இவருக்கு துக்ளக் என்றோர் மகன் இருக்கிறார். அவரும் சினிமாவில் நடித்து வந்ததாக தெரிகிறது எனினும் அவர் நடித்த படம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. 

இந்த சூழ்நிலையில் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கை காவல்துறையினர் போதை வழக்கில் கைது செய்திருப்பதாக விஷயங்கள் வேகமாக பரவி வந்து திரையுலகை அதிர்ச்சியில் தள்ளி உள்ளது. 

மன்சூர் அலிகானை பொருத்தவரை விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகர் படத்தில் வில்லனாக அறிமுகமாகி தனது மிரட்டலான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தார். 

இதனைத் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்து சேர பல படங்களில் தனது அபார திறமையை காட்டியதோடு திரைப்பட வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் குறைந்ததை அடுத்து அரசியலில் குதித்தார். 

அந்த வகையில் முதலில் நாம் தமிழர் கட்சியில் இணைந்திருந்த இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இதனை அடுத்து அந்த கட்சியில் இருந்து விலகி தானாகவே புதிய கட்சியை உருவாக்கினார். 

எப்போதும் அரசியல் களத்தில் இருப்பதாக சொல்லி பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அண்மையில் கூட லியோ படத்தில் நடித்திருந்தது நினைவில் இருக்கலாம். இதைத் தொடர்ந்து இவர் திரிஷா குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை எழுப்ப அதை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு அமைதியானார்.

இந்நிலையில் அவரது மகன் துக்ளக் சென்னையில் சில நாட்களுக்கு முன் கஞ்சா மெத் ஆகிய போதைய பொருட்களை விற்ற நபர்களோடு தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரித்து வருகிறார்கள். 

இதைத் தொடர்ந்து அந்த போதை பொருட்களை விற்ற கும்பலோடு அவருக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: Mansoor Ali Khan’s son recently made headlines when he was arrested, and the buzz around it has everyone talking. The details are still unfolding, but here’s what we know so far. It all went down late last night when authorities swooped in during a routine check. Reports suggest that there might have been some misunderstandings involved, but the specifics are still murky.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam