தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்து டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளார்.
அதற்காக அரசியல் பணிகளை தொடங்கி முழு வீச்சில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் . தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தன்னுடைய புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் அது சார்பில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
விஜய்யின் அரசியல் பயணம்:
அதன்படி தமிழகத்தில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கூட சென்னையில் நடைபெற்றது.
மேலும், சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 60 பேர் பலியாகினர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் “இந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்” என்றும் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இப்படியாக சமூகநலன் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து விஜய் அக்கறை செலுத்தி அரசியலில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார்.
மாநாடு எப்போ?
இதற்காக விஜய்யின் ரசிகர்கள், மக்கள் பலரும் அவருக்கு பேராதரவு கொடுத்து வரும் வேலையில் விஜய் தனது கட்சி சார்பில் எப்போதும் மாநாடு நடத்தப் போகிறார் என்ற கேள்விதான் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.
ஒரு அரசியல் கட்சி என்றால் அந்த கட்சிக்கு கொடி எவ்வளவு முக்கியமோ அதை காட்டிலும் மிகவும் முக்கியம் மாநாடு.
இதனால் விஜய் எப்போது மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறார்? அந்த மாநாட்டில் அவர் என்னென்ன விஷயங்களை பற்றி பேசப் போகிறார்? தன்னுடைய அரசியல் கொள்கைகளாக எதை அவர் கூற போகிறார் என்பதை கேட்க மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசி உள்ள பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு அவர்கள் சமீபத்திய பேட்டியில், லியோ படத்தின் போதே விஜய் மாநாடு திட்டத்தை துவங்கிவிட்டார்.
திருச்சி பொன்மலையில் பிரம்மாண்டமான ஒரு மேடையில் லியோ படத்தின் ஆடியோ லான்சில் சேர்த்து மாநாடு நடத்த திட்டமிட்டனர்.
அந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக திட்டமிடப்பட்டது. ஆம், கிட்டத்தட்ட 50 ஆம்புலன்ஸ்கள் மக்களுக்கு உணவு ஏற்பாடுகள், இயற்கை உபாதை கழிப்பதற்கான கழிப்பறை வசதிகள் திட்டமிட்டிருந்தனர்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் யாரும் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என விஜய் கூறியுள்ளார் என லியோ படத்தின் ப்ரடியூசர் லலித் கூறியதாக செய்யார் பாலு கூறியிருக்கிறார்.
அதன் பிறகு என்ன ஆனது? தெரியவில்லை அப்படியே அது நடக்காமல் போய்விட்டது. தற்போது விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கப் போவதாக கூறப்படுகிறது .
எம்ஜிஆர் பாணியில்… அடம் பிடிக்கும் தளபதி:
எனவே கோட் படத்தின் ரிலீசுக்கு பிறகு செப்டம்பர் 25 அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை விஜய் நடத்துவார்.
அந்த மாநாடு காண ஒவ்வொரு ஏற்பாடுகளையும் இப்போதே புஸ்ஸி ஆனந்த் பார்த்து பார்த்து செய்து வருகிறார். மேலும், இந்த மாநாட்டை எம்ஜிஆர் பாணியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இந்த பிரம்மாண்ட மாநாடு சேலம் அருகில் உள்ள நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ,மதுரை, திருச்சி போன்ற இடங்களில் மாநாடு நடத்த இடங்கள் ஏதுவாக இருக்கும் சமயத்தில் விஜய் இந்த நாயக்கன்பட்டியில் தான் மாநாடு நடத்த வேண்டும் என கூறினார். புஸ்லி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அந்த பேட்டியில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.