நடிகை சுஜாதா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.
இவரைப் போலவே நடிகர் முத்துராமனும் தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த அந்தஸ்தை பிடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவரும் நடிகை சுஜாதாவும் இணைந்து நடித்த படம் தான் மயங்குகிறாள் ஒரு மாது.
கல்லூரி நண்பனின் ஆசைக்கு இணங்கியதால் வெடித்த பிரச்சனை..
சூப்பர் டூப்பர் கிட்ட அடிக்க இந்த படத்தின் கதையை பொருத்த வரை கல்லூரியின் நண்பனின் ஆசைக்கு இணங்கிய சுஜாதா ஒரு காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் நடிகர் முத்துராமனை கதையில் திருமணம் செய்து கொள்கிறார்.
எனினும் கெட்டுப்போன இவர் தன் கணவரிடம் வாழும் போது அவருக்கு தன் கணவருக்கு துரோகம் செய்து விட்டது போன்ற எண்ணம் ஏற்பட்டதை அடுத்து அந்தக் கதையில் ஒன்று அவர் அதை நினைத்து நோய்வாய்ப்பட்டு இறந்து விட வேண்டும்.
இல்லையென்றால் தன் உயிரை விட்டுவிட வேண்டும் இப்படி கதையின் முடிவு இருந்தால் தான் படம் நன்றாக ஓடும் என்று டிஸ்ட்ரிபியூட்டர்கள் பலரும் கிளைமாக்ஸை மாற்ற சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் படத்தின் இயக்குனர் அந்த படத்தின் கிளைமாக்ஸ் அப்படியேதான் இருக்கும் அதை எந்த விதத்திலும் மாற்றப் போவதில்லை என்று அடம் பிடித்ததை அடுத்து படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.
8 மாச முடிவில் எதிர்பாராத ட்விஸ்ட்..
எட்டு மாதம் காத்திருந்த நிலையில் அவர் பிடிவாதம் பிடித்தபடியே எந்தவித மாற்றமும் இல்லாமல் இந்த படத்தின் கதை மற்றும் படம் திரையரங்குகளில் வெளிவந்தது.
என்ன ஆச்சரியம் எட்டு மாதம் முடிவில் எதிர்பார்க்காத ரிசல்ட்டை இந்த படம் கொடுத்து மாபெரும் வெற்றியை பெற்று தந்ததை அடுத்து டிஸ்ட்ரிபியூட்டர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்கள்.
மேலும் ஒரு படத்தின் கதை ஸ்ட்ராங்காக இருக்கக்கூடிய பட்சத்தில் நிச்சயமாக அதை ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு முன் உதாரணமாக இந்த திரைப்படம் அமைந்ததோடு மட்டுமல்லாமல் கதைக்களமும் சிறப்பாக இருந்தது என்று சொல்லலாம்.
இதை அடுத்து பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்றுத் தந்த மயங்குகிறாள் ஒரு மாது படமானது முத்துராமன் மட்டுமல்லாமல் சுஜாதாவுக்கும் திருப்புமுனையாக தங்களது சினிமா வாழ்க்கையில் அமைந்த படங்களில் ஒன்றாக மாறியது என்றால் அதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது என்று சொல்லலாம்.