எனக்கு புகைப்பிடிக்க கத்து குடுத்ததே இவரு தான்.. வெக்கமின்றி கூறிய நடிகை மீரா கிருஷ்ணன்..!

சினிமாவில் நடிக்க வந்துவிட்டால், எப்படி வேண்டுமானாலும் நடித்துதான் ஆக வேண்டும் போலிருக்கிறது. குரங்குக்கு வாழ்க்கை பட்டால் மரத்துக்கு மரம் தாவுவது போல, டைரக்டர் சொல்கிற படி எல்லாம் நடித்தாக வேண்டும்.

அதிலும் நடுத்தர வயது பெண்மணி, பிரபலமான ஒரு பெண்மணி சிகரடெ் பிடிக்கும் காட்சியில் எல்லாம் நடிப்பது சற்று வரம்பு மீறிய செயலாக தான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

மீரா கிருஷ்ணன்

துவக்கத்தில் தூர்தர்ஷன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் மீரா கிருஷ்ணன். அதன்பிறகு சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிசெய்தார். பிறகு சினிமாவில் சின்ன கேரக்டர்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடிக்க துவங்கினார்.

வசீகரா படத்தில்

கடந்த 2003ம் ஆண்டில் வசீகரா என்ற படத்தில் மீரா கிருஷ்ணன் நடித்திருந்தார். நடிகர் நாசரின் மனைவியாக, சினேகாவின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன்பிறகு வசூல் ராஜா எம்பிபிஎஸ், இதயத் திருடன், சகுனி, சிறுத்தை, சொன்னா புரியாது, நையாண்டி, காதல் கிறுக்கன், எதிரி, சாணக்யா, தாமிரபரணி, நேபாளி, சண்டை, கூடல் நகர், மாசிலாமணி, அரண்மனை என ஏகப்பட்ட படங்களில் மீரா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

சீரியல் நடிகை

அதுமட்டுமின்றி டிவி சீரியல்களிலும் மீரா கிருஷ்ணன் அதிகமாக நடித்திருக்கிறார். அண்ணாமலை, மனைவி, சொர்க்கம், லட்சுமி, கனா காணும் காலங்கள், கோகுலத்தில் சீதை, ஆண்பாவம், வசந்தம் என பல சீரியல்களில் நடித்தும் பெண்கள் மத்தியில் மிக பிரபலமானவர்.

மகிழ்திருமேனி இயக்கத்தில்

சமீபத்தில் தன் கணவருடன் மீராகிருஷ்ணன் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது மகிழ் திருமேனி இயக்கிய ஒரு படத்தில், மீராகிருஷ்ணன் சிகரட் பிடிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து அந்த நேர்காணலில் மீராகிருஷ்ணன் கூறியதாவது,

இதையும் படியுங்கள்: பெரிய அதிகாரியின் வேட்டைக்கு இரையான பிரபல நடிகை.. ஹோட்டலில் விடிய விடிய விருந்து..

சிகரட் பிடிக்கிற காட்சியில் நடிக்கணும்

எனக்கு தம்மடிக்க சொல்லிக் கொடுத்ததே இவர்தான். இவருக்கும் பழக்கம் கிடையாது. மகிழ்திருமேனி சார் ஏற்கனவே கூப்பிட்டு என்கிட்ட தெளிவா சொல்லிட்டார். நீங்க சிகரட் பிடிக்கற மாதிரியான ஒரு காட்சியில் நடிக்கணும். மேடம் இது உங்களுக்கு பிளஸ் ஆகவும் அமையலாம். மைனஸ் ஆகவும் மாறலாம் என்றார்.

சார், அது ஒண்ணும் பிரச்னை இல்லை.எனக்கு மைனஸா ஆனாலும் பரவாயில்லை. எனக்கு பிடிச்சிருந்தா அதை நான் பண்ணுவேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லே. இது கேரக்டர். அப்படீன்னு சொல்லிட்டேன்.

சொல்லிக் கொடுத்தாங்க…

அப்புறம் வந்து மென்த்தால் சிகரட் எல்லாம் கொடுத்து, எப்படி புகை பிடிக்கறதுன்னு ஆபீஸ்லேயே சொல்லி கொடுத்தாங்க. எப்படி இழுக்கற மாதிரி இழுத்து புகையை வெளிய விடணுமுன்னும் சொல்லிக் கொடுத்தாங்க. அப்புறம் வீட்டுக்கு ஒரு நாலைந்து சிகரட் கையில் கொடுத்து விட்டு அனுப்பிச்சாங்க.

இதையும் படியுங்கள்: அட கடவுளே.. எப்படி இருந்த மனுஷன்.. லோகேஷ் குடும்பத்தில் கும்மி அடிச்சுவிட்ட ஸ்ருதிஹாசன் கமல்..

மேடம் நிஜமாகவே பழகிடாதீங்க. அப்புறம் இவர்தான். இவருக்கும் பழக்கம் கிடையாது. மொட்டை மாடியில போய் தம்மடிச்சு பார்த்துட்டு இவர் எனக்கு மேல இருமறார். நானே பரவாயில்லை போலிருக்கு, என்று பேசியிருக்கிறார் நடிகை மீரா கிருஷ்ணன்.

எனக்கு புகைப்பிடிக்க கத்து குடுத்ததே என் கணவர்தான் என்று வெக்கமின்றி கூறிய நடிகை மீரா கிருஷ்ணனை பார்த்து, நீங்க சொல்றதை பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கும்மா, என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam