“அஜித் மாதிரி அழகா பிரைட்டாக..!” – ஆண்களுக்கான பியூட்டி டிப்ஸ்..!

இன்று இருக்கும் இளைஞர்கள் பெண்களைப் போலவே தங்களை அலங்கரித்துக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டி வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஆண்களுக்கு உரிய அழகு நிலையங்களை நோக்கி செல்வதோடு பணத்தை பல வகைகளில் இதற்காக செலவு செய்கிறார்கள்.

எனவே அவர்கள் வீட்டிலேயே பைசா செலவில்லாமல் அவர்களின் அழகை மேம்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும் சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாமா?.

ஆண்கள் பயன்படுத்த வேண்டிய அழகு குறிப்புகள்

முகத்தை பளிச்சென்று காட்ட வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆண்கள் கடலைமாவை பயன்படுத்தினால் போதுமானது. இந்த கடலை மாவுடன் சிறிதளவு பாலை சேர்த்து நன்கு குழைத்து உங்கள் முகத்தில் தடவி விடுங்கள்.

 20 நிமிடங்களுக்குப் பிறகு இது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவ வேண்டும் தொடர்ந்து இதனை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் சருமம் பளிச்சென்று மின்னும்.

உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் சந்தனம் இருந்தால் அது இரண்டையும் ஒன்றாக சேர்த்து குழைத்து கருமையாக இருக்கக்கூடிய முகத்தின் பகுதியில் நன்றாக இரவே தேய்த்து விடுங்கள்.

 மறுநாள் காலை எழுந்து நீங்கள் குளிர்ந்த நீரில்  கழுவுவதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கருமை நிறம் விரைவில் மாறும்.

வெயிலில் அதிக அளவு நீங்கள் செல்வதால் உங்கள் முகம் வறட்சியோடு இருக்கும் இதை நீக்க வெள்ளரிக்காயோடு ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து இதனை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்த பிறகு நீங்கள் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி பாருங்கள் உங்கள் முகம் ஈரப்பதத்தோடு இருக்கும்.

வேப்பிலையை அரைத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது பாலினை சேர்த்து உங்கள் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் பருக்கள் ஏற்படாது.

பாதாம் எண்ணெயை உங்கள் முகத்தில் இரவு நேரங்களில் தடவி வந்தால் உங்கள் சருமம் தகதகவென்று மின்னி கருப்பாக இருப்பவர்களும் கலராக மாறிவிடுவார்கள்.

நேற்கூறிய டிப்ஸை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு முக அழகு ஏற்படுவதோடு சரும அழகும் கூடும். நீங்களும் இதை யூஸ் செய்து பாருங்கள் உங்களுக்கு ஏற்படும் மாற்றம் உங்களுக்கே தெரியும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …