படக்குழுவுக்கு வான் கோழி பிரியாணி.. எம்.ஜி.ஆருக்கு மட்டும் சைவம்.. சுவராஸ்யமான சம்பவம்..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆனந்த ஜோதி படம். ஒரு நாள் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வான் கோழி பிரியாணி போட்டு விட்டு தான் மட்டும் சைவ உணவை எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்கு என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த 1963 ஆம் ஆண்டு வெளியானது ஆனந்த ஜோதி திரைப்படம். இயக்குனர் வி என் ரெட்டி மற்றும் எஸ் ஏ சாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஜாவர் சீதாராமன்.

பி எஸ் வீரப்பா தயாரிப்பில் நடிகர்கள் எம்.ஜி.ஆர், எம் ஆர் ராதா, எஸ் ஏ அசோகன், கமலஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து இருந்தார்.

மட்டுமில்லாமல் இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை தேவிகா நடித்திருந்தார். நடிகை மனோரமாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

MGR with Kamal Haasan at Aanandha Jyothi Movie

அந்த நேரத்தில் லைப் மேன் ஒருவர் அங்கே வந்திருக்கிறார். அங்கே இருந்த சக ஊழியர் ஒருவர் அந்த லைட் மேனை பார்த்து என்னப்பா நாஸ்தா சாப்பிட்டாச்சா..? என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அந்த லைட் மேன் எங்க சாப்பிடுறது.. கேமரா மேன் கூப்டாருன்னு அவசர அவசரமா எதையோ முழுங்கிட்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார். அந்த சக ஊழியர், சரி விடுப்பா.. மதிய உணவில் அதற்கும் சேர்த்து சாப்பிட்டால் போச்சு.. வா வேலையை பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் அந்த லைட் மேன்.. ஆமா பெரிய மதியம் சாப்பாடு.. இங்க என்ன வான்கோழி பிரியாணியா போட போறாங்க..? எதோ கெடைகுறத சாப்பிட்டுட்டு.. கெடைக்குற வேலையை செஞ்சிட்டு இருக்கோம்.. இதுல வேற மத்தியானம் எங்கே போய் சேர்த்து சாப்பிடுறது என்று சலிப்பாக்க போயிருக்கிறார்.

இல்ல உரையாடலை எம்.ஜி.ஆர் அவதானித்து இருக்கிறார். அன்று மதியம் படக்குழுவில் இருந்த அனைவருக்கும் வான்கோழி பிரியாணி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அன்று வியாழக்கிழமை என்பதால் எம்.ஜி.ஆர் அசைவம் சாப்பிட மாட்டார் என்பதால் அவர் சைவ உணவை சாப்பிட்டிருக்கிறார்.

ஆனால், படக்குழுவில் அனைவரும் வான்கோழி பிரியாணி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்த அவருடைய மேக்கப் மேன் முத்து.. என்ன சார் இன்னைக்கு வியாழக்கிழமை இன்னைக்கு போய் எல்லோருக்கும் வான்கோழி பிரியாணி போட்டு இருக்கீங்களே.. நீங்களும் அசைவம் சாப்பிடும் என்று ஆர்டர் கொடுத்திருந்தால் எங்களுடன் சேர்ந்து நீங்களும் வான்கோழி பிரியாணி சாப்பிட்டு இருக்கலாமே..? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த புரட்சி தலைவர் இங்கு அனைவருமே.. நான்.. நீங்கள். படத்தில் வேலை செய்பவர்கள்.. எல்லோருமே வேலை செய்வது அரை சான் வயித்துக்குத்தான். அவர் இன்னைக்கு தான் வான்கோழி பிரியாணி ஆசைப்பட்டார். அதனை இன்றே நிறைவேற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று தான் இன்று ஆர்டர் செய்தேன் என கூறியிருக்கிறார்.

நடிகராக இருந்த எம் ஜி ஆர் எங்கே மக்கள் திலகம் ஆனார் என்று பலரும் பல்வேறு உதாரணங்களை கூறுவார்கள். ஆனால் உடன் பணியாற்றக்கூடிய ஒரு நபர் ஆசைப்பட்ட ஒரு உணவை அவருக்கு மட்டுமில்லாமல் அவருடைய அவர் சார்ந்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பரிமாறி மகிழ வைத்ததும் ஒரு காரணம் என்று கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam