இளம் நடிகருடன் சில படங்களில் இணைந்து நடித்த அந்த ப்ளூ குயின் நடிகை கடன் தொல்லையால் விபரீதமான முடிவு எடுத்து இந்த உலகத்திற்கே விடை கொடுக்க தயாராகி இருக்கிறார்.
ஆனால், சரியான நேரத்தில் அவருக்கு உதவி செய்த மோர் நடிகர் நடிகையை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறார். வெளிச்ச டிவி சீரியலில் சில ஹிட் தொடர்களில் நடித்து வந்த ப்ளூ குயின் நடிகையுடன் ஆரம்பத்தில் இருந்தே இந்த மோர் நடிகருக்கு நல்ல பழக்கம் இருந்திருக்கிறது.
அக்கா தம்பியாக இருவரும் பழகி வந்திருக்கின்றனர். நடிகைக்கு சமீப காலமாக சீரியல் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதே சமயம் சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக கடன் தொல்லையில் சிக்கி அவதிப்பட்டு இருக்கிறார். சினிமா சீரியல் என பிசியாக இருந்தபோது பந்தாவாக வாழ்ந்து கொண்டிருந்த நடிகைக்கு தற்போது தங்களுக்கு தெரிந்த தனக்கு தெரிந்த பிரபலங்களிடம் பணம் என கையேந்தி நிற்க கூச்சமாக இருந்திருக்கிறது.
இதனால் தனக்கு தெரிந்த யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்று நினைத்திருக்கிறார் அந்த நடிகை. இது ஒரு பக்கம் இருக்க கடன் கொடுத்தவர்கள் மறுபக்கம் நடிகையை அசிங்கப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதனால் உலகத்திற்கு விடை கொடுக்க முடிவு கொடுக்கலாம் என விபரீத முடிவுடன் இருந்திருக்கிறார் ப்ளூ குயின் நடிகை. சினிமாவில் சில வாய்ப்புகள் கிடைத்ததும் நம்முடைய மார்க்கெட் எங்கேயோ போகப் போகிறது என்று நம்பிக் கொண்டிருந்த நடிகை கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். மட்டுமில்லாமல் பளபளப்பான புதிய சொகுசு கார் ஒன்றையும் வாங்கி இன்ஸ்டாகிராமில் சீன் காட்டி வந்தார்.
தற்போது பட வாய்ப்பு இல்லை சீரியல் வாய்ப்பும் இல்லை என்ற சூழ்நிலையில் மாதா மாதம் தவணையை செலுத்துவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் நடிகையை மிகவும் கேவலப்படுத்தி திட்டி கடனை அடைக்க வேறு விதமான ஆலோசனைகளையும் கொடுத்திருக்கின்றனர்.
நீதான் நடிகை ஆச்சே நீ வாங்கிய கடனை அடைக்க வேற வழி சொல்றோம் என்று நடிகையை கொச்சைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சீரியலில் சாதித்த அந்த மோர் நடிகர் சினிமாவில் அறிமுகமாக போராடும்போதெல்லாம் ப்ளூ குயின்.நடிகை மிகவும் உறுதுணையாக இருந்து பல பேரிடம் அறிமுகம் செய்து வைத்து அந்த நடிகரை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இருவருக்கும் நெருக்கமான தோழி ஒருவரின் வாயிலாக ப்ளூ குயின் நடிகையின் நிலை குறித்து அறிந்து கொண்ட மோர் நடிகர் உடனடியாக அந்த நடிகைக்கு மிகப்பெரிய பண உதவி செய்து அவருக்கு இருந்த கடன் சுமையை போக்கியிருக்கிறார்.
இதனை வெளியே சொல்லலாம். ஆனால், கூடவே ப்ளூ குயின் நடிகைக்கு நேர்ந்த அவமானங்களையும் சொல்ல வேண்டுமே என்ற காரணத்தினால் இதனை வெளியில் சொல்லாமல் அப்படியே மறைத்திருக்கிறார்.
இதனை அறிந்த சின்னத்திரை வட்டாரங்கள் என்னா மனுஷன்யா.. என்று மோர் நடிகருக்கு பாராட்டு பத்திரம் வாசித்து வருகின்றனர்.
Summary in English : In a surprising turn of events, Mor Actor has stepped up to help settle the debts of Blue Queen Actress, showcasing the camaraderie that exists in the film industry. It’s no secret that the journey in cinema can be a tough one, filled with ups and downs.