ARR -க்கு ஏழரை துவங்குகிறதா? சொதப்பல் கச்சேரி to விவாகரத்து வரை..!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு நேற்று தன் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த அடுத்து ஏற்பட்டிருக்கும் விமர்சனங்கள் மற்றும் இதர விஷயங்கள்.

திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் தனது முப்பதாவது திருமண ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடலாம் என்று நினைத்திருந்த வேளையில் இப்படி ஒரு இடி வந்து விழுந்தது.

இதற்கு காரணம் ஏ ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் பேர் இடியை இறக்கி விட்டார். 

ar rahman

இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கக்கூடிய முக்கிய நபர்கள் அனைவருமே குழந்தைகள் நன்கு வளர்ந்து பெரிதான நிலையில் விவாகரத்து அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள். 

அந்த வகையில் அண்மையில் இசை புயலை போலவே அவரது மருமகன் ஜிவி பிரகாஷ் சைந்தவி விவகாரத்து விஷயம் வெளிவந்தது. இதனை அடுத்து தற்போது ஏ ஆர் ரஹ்மான் அறிவித்திருக்கும் இந்த விவாகரத்து இணையதள வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் சமீபகாலமாக சினிமாவிலும் சரி தனது சொந்த வாழ்க்கையிலும் சரி அடுக்கடுக்கான சரிவுகளை ஏஆர் ரஹ்மான் சந்தித்து வருகிறார் என்று கூட சொல்லலாம்.

lal saalam

29 ஆண்டுகள் நீடித்து நிலைத்த இவர்களது மண வாழ்க்கை சுக்கு நூறாக உடைந்து விட்டதே என்று பலரும் பீல் செய்து வருகிறார்கள். அது மட்டுமா? கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி பனையூரில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை கச்சேரி ஒன்றை நடத்தி இருந்தார். 

இந்த கச்சேரியில் கூட போலீஸ் டிக்கெட் மோசடி கூட்ட நெரிசல் என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து பலரும் பல்வேறு வகையில் அது குறித்து ட்ரோல் செய்து இருந்தார்கள். 

லிங்கா படத்துக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் இணைந்து பணியாற்றிய லால் சலாம் படமும் ஓடிடியில் கூட வெளி வராத அளவு சிக்கலை சந்தித்துள்ளது. இதை அடுத்து இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்தாரா? இல்லை அவரது மகன் இசையமைத்தாரா? என்ற கேள்விகள் எழுந்தது.

muic

இதை அடுத்து ஆறுதல் தரக்கூடிய விஷயமாக ராயன் படத்தில் அவரது இசை இருந்ததோடு மட்டுமல்லாமல் உசுரே நீதானே என்ற வரிகள் அனைவரையும் கட்டி போட்டது. 

பழகுவதற்கு அமைதியான தன்மை கொண்ட இசை புயல் மிகவும் சாப்டான கேரக்டர் கொண்டவர். ஒவ்வொரு இடத்திலும் தன் மனைவி பற்றி பெருமையாக பேசி இருக்கும் இவருக்கு அப்படி என்ன நெருடல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு ஏழரை சனி நடக்கிறதா? என்று பலரும் தற்போது பேசி வருகிறார்கள்.

Summary in English: Recently, fans of the legendary A.R. Rahman faced quite a rollercoaster ride, and not in a good way! It all started with a music concert that was supposed to be the highlight of the year for many. Excitement was in the air as tickets flew off the shelves, but then things took a wild turn.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam