நவரச நாயகன் கார்த்திக் அப்பாவிற்கு நடைப்பயிற்சியால் ஏற்பட்ட விபரீதம்!!.. அடப்பாவமே இப்படியா ஆச்சு?

1960 காலகட்டங்களில் ஆங்கில நடிகர்களுக்கு இணையான உருவத்தில் காட்சியளித்த நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பா முத்துராமன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்திருக்க கூடியவர். மேலும் இரண்டாம் கட்ட நாயகனாக பல படங்களில் வலம் வந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.

 நடைப்பயிற்சியால் ஏற்பட்ட விபரீதம்..

நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பா முத்துராமன் தஞ்சையை பூர்வீகமாகக் கொண்டவர். இதை எடுத்து சினிமாவின் மீது கொண்ட ஆசையால் சென்னை நோக்கி வந்து படங்களில் நடிக்க வாய்ப்புகளைத் தேடி வந்தார்.

முத்துராமன் நடிப்பில் வெளிவந்த பஞ்சவர்ண கிளி, மேஜர் சந்திரகாந்த், சர்வம் சுந்தரம், சூரியகாந்தி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசும் பொருளாக உள்ளது. இவர் ஏ பீம் சிங், ஆர் ராமமூர்த்தி, முத்தா சீனிவாசன், எஸ் முகர்ஜி போன்ற இயக்குனர்களின் படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். மேலும் முத்துராமன் படத்தில் கடைசியாக 1982 ஆம் ஆண்டு நடித்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு பாணியை வகுத்து அதன் வழியில் மிகச் சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு நவரச திலகம் என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்த இவர் அண்ணாதுரை எழுதிய கதையில் கலைஞர் வசனம் எழுத வெளி வந்த திரைப்படமான ரங்கோன் ராதா திரைப்படத்தில் அறிமுகமாகி தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்ததை அடுத்து படு பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறிய இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அடப்பாவமே இப்படியா ஆச்சு?

தமிழ் திரை உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் ஆயிரம் முத்தங்கள் என்ற திரைப்படத்திற்காக நடிக்க ஆயத்தமான நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்துள்ளது.

அப்படி அந்த படம் நடிக்க ஊட்டிக்கு ஷூட்டிங் சென்றிருந்த சமயத்தில் அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்ற முத்துராமனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி வெளி வந்தது.

இதை அறிந்த அவரது ரசிகர்கள் நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடிய சமயத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பாவிற்கு உயிர் பிரிந்ததா? என்ற விஷயத்தை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு நடைபயிற்சியால் இப்படி ஒரு விபரீதம் நடந்து விட்டதே என்று அவர்கள் அவர்களோடு இந்த விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version