சினிமா செய்திகள்
ஆண்ட்ரியாவை நிர்வாணமா பாத்தேன்.. ஆனால்.. இதை செய்யல.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!
![](https://www.tamizhakam.com/wp-content/uploads/2025/01/andrea-mysskin-1.jpg)
இயக்குனர் மிஷ்கின், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். எளிமையான கதைகளை வைத்து மிகச்சிறந்த காட்சி அமைப்புகளை வெளிப்படுத்தி படம் இயக்குவதில் மிகுந்த திறமைசாலியாக பார்க்கப்படுகிறார்.
இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், இசையமைப்பாளர் என பல துறைகளில் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார்.
மிஷ்கின் கடந்த வாரம் ராதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சில கெட்ட வார்த்தைகள் பெரும் சர்ச்சையாக மாறியிருந்தன. பலரும் அதை கண்டித்து பேசினார்கள். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஸ்கின் பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைக்க முடிவு செய்தேன்.
அதற்கான போட்டோஷூட் நடத்த நான் உதவி இயக்குனரை தான் அனுப்பி வைத்தேன். அந்த சூட் நடக்கும்போது கூட நான் வெளியே நின்று சிகரெட் பிடித்து விட்டு என்னுடைய ஆபீசுக்கு வந்து விட்டேன்.
அதன் பிறகு ஆண்ட்ரியாவை போன் மூலம் அழைத்து உனது நிர்வாண போஸை நான் படத்தின் போஸ்டரில் வைத்தால் எல்லோரும் என்னை போல் அந்த நிர்வாண புகைப்படங்களை நயத்தோடும் தாய்மை உணர்வோடும் பார்ப்பார்களா? அப்படிங்கிறது எனக்கு தெரியாது.
கண்டிப்பா பலர் அந்த புகைப்படங்களை பார்த்து விமர்சிப்பார்கள். இதனால் இது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதை நிர்வாண புகைப்படத்தை போஸ்டரில் பயன்படுத்தியிருந்தால் படத்துக்கு கூட்டமும் வந்திருக்கும். படமும் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால் தான் அவ்வாறு செய்யவில்லை. அதுதான் என்னுடைய குணம் எனக் கூறியிருந்தார் மிஷ்கின்.
மிஷ்கினின் இந்தப் பேச்சு பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சிலர் அவரது நேர்மையை பாராட்டியுள்ளனர், அதே சமயம் சிலர் அவரது அணுகுமுறையை விமர்சித்துள்ளனர். ஒரு நடிகையை நிர்வாணமாக நடிக்க வைக்க முடிவு செய்ததும், பின்னர் அதை வேண்டாம் என்று கைவிட்டதும் அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது.
மிஷ்கினின் சர்ச்சை பேச்சு பெண் சுதந்திரம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது. பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆடவும், நடிக்கவும் உரிமை கொண்டவர்கள் என்ற கருத்து ஒருபுறம் வலுவாக முன்வைக்கப்படுகிறது. அதே வேளையில், நிர்வாண காட்சிகள் மற்றும் ஆபாசமான சித்தரிப்புகள் பெண்களை தவறாக சித்தரிக்கின்றன என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
மிஷ்கினின் பேச்சு, சினிமா துறையில் பெண்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நடிகைகள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியுமா? அல்லது அவர்கள் இயக்குனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க வேண்டுமா? என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகின்றன.
மிஷ்கினின் பேச்சு, சினிமா மற்றும் சமூகம் சார்ந்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது மேலும் பல விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.