இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் மிஷ்கின், நடிகை காயத்ரி சங்கர், மிருணாளினி ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.
இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை நதியா தான். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்திருக்கிறார் நடிகை நதியா.
ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து நடிகை நதியா விலகினார். அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அவருடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
ஏன் நடிகை நதியா இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று படத்தின் இடம் பெற்ற ஒரு காட்சியில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கினை நடிகை நதியா கன்னத்தில் பளார் என அறைவது போன்ற ஒரு காட்சி.
இந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக பலமுறை படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட டேக்குகள் சென்றிருக்கிறது. 50 முறையில் சில முறை நிஜமாகவே இயக்குனர் மிஷ்கின் கன்னத்தில் பளார் விட்டுள்ளார் நதியா. ஒரு கட்டத்தில் அந்த காட்சி சரியாக வரவில்லை என்று புலம்பியுள்ளார் இயக்குனர் என்றும் இதனால் நடிகை நதியா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்று ஒரு தகவல் கூறுகின்றன.
அதே போல, இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதே படத்தில் ஒரு காட்சியில் நடிகை நதியா ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மகன் அவரை போடி தே### என்று திட்டுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை பற்றி கேட்டதும் நடிகை நதியா மிரண்டு போயிருக்கிறார்.
இத்தனை நாட்களாக நான் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் எனக்கென எடுத்து வைத்திருக்கக்கூடிய ஒரு பெயரை இந்த ஒரு படம் மொத்தமாக காலி செய்து விட வாய்ப்பு இருக்கிறது என்று அச்சப்பட்டு இருக்கிறார். பெற்ற மகனே தன்னை இப்படி மோசமாக திட்டுவது போன்ற ஒரு காட்சி யோசித்துக் கூட பார்க்க முடியவில்ல. என்று அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகை நதியா.
இந்த இரண்டு காரணங்கள் பரவலாக பேசப்படுகிறது. உண்மையான காரணம் என்ன என்று நடிகை நதியா கூறினால் தான் தெரியவரும்.