இதை மட்டும் பண்ணாதிங்க.. மகன் திருமணம் குறித்து நெப்போலியன் உருக்கம்..!

தமிழ் திரைப்படங்களில் ஆஜானுபாவுக்காக தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் பலர் மனதை கொள்ளை கொண்ட சீவலப்பேரி பாண்டியாய் வலம் வந்த நடிகர் நெப்போலியன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் மிகச்சிறந்த நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு குழந்தைக்கு சிறந்த தகப்பனாகவும் விளங்குகிறார் என்ற விஷயம் அண்மைக்காலமாக பலருக்கும் தெரிந்திருக்கும்.

இதை மட்டும் பண்ணாதிங்க..

இவர் தனது மகனின் தசை சிதைவு நோயின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு வகைகளில் முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் மகனுக்காக சினிமா, அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனவர்.

பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தனது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதை அடுத்து அவரது முன்னேற்றத்திற்காக தன்னுடைய கேரியரை பற்றி கவலைப்படாமல் தன் மகனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அற்புத அப்பா.

இவரைப் பார்த்து இவரைப்போல் அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று இன்று பலரும் ஏங்குவதோடு மட்டுமல்லாமல் ஒரு சிறந்த அப்பாவிற்கான உதாரணமாக இவரை சொல்லுவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று பேசி வருகிறார்கள்.

இது மாதிரியான தசை சிதைவு நோயால் தாக்கப்பட்டவர்கள் அதிக நாள் உயிர் வாழ மாட்டார்கள் என்ற நிலையில் அதை தகர்த்து எறிய கூடிய வகையில் தன்னுடைய ஆசை மகனை எந்த அளவு உயர்த்தி இருக்க கூடிய நடிகர் நெப்போலியன் தற்போது அவருக்கு திருமணமும் நடத்தி வைக்க இருக்கிறார்.

மகன் திருமணம் குறித்து நெப்போலியன் உருக்கம்..

ஏற்கனவே சொந்தத்தில் அதுவும் திருநெல்வேலியில் இருந்து ஒரு பெண்ணை தன் வீட்டிற்கு மருமகளாக அல்ல மகளாக அழைத்துச் செல்ல உள்ள நிலையில் இவர்களது திருமணம் ஜப்பானில் நடக்க உள்ளதால் குடும்பத்தோடு ஜப்பான் சென்று இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

ஏற்கனவே இவரது மகன் தனுஷ் பற்றி பல்வேறு விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து பேசும் பொருளானது உங்கள் நினைவில் இருக்கலாம். அந்த வகையில் தனுஷால் விமான பயணத்தை மேற்கொள்ள முடியாது என்பதால் திருமணத்திற்கு கப்பலிலேயே சென்று இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிய போகிறது என்று பலரும் பல்வேறு வகையில் விமர்சனம் செய்திருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இந்த விமர்சனங்கள் குறித்து அண்மையில் நெப்போலியன் பேசும் போது உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற விமர்சனங்களை வெளியிடுவது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

 

மேலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை என்றுமே விமர்சனம் செய்வது குற்றமாக கூறியிருக்கும் அவர் அனைவருக்கும் ஒரு குடும்பம் உள்ளது என்பதை எந்த நிலையிலும் மறக்க வேண்டாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அத்தோடு வார்த்தையால் அனைவரையும் வாழ்த்துங்கள் அது ஒரு யானை பலத்தை எல்லோருக்கும் கொடுக்கும். அதை விடுத்து மனதை நோகடிக்காதீர்கள். வாழ விடுங்கள் என்று உருக்கமான செய்தியை போட்டு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

Check Also

கோடிகளில் புரளும் சினிமா சமையல்காரர்.. மாதம்பட்டி ரங்கராஜின் தெரியாத பக்கங்கள்..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தற்சமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். …