இவர்களால் தான் புலி படம் FLOPஆனது நட்டி நடராஜன் விளாசல்..!

Actor Natty, also known as Natarajan, has recently articulated his perspective on the factors contributing to the lackluster performance of the film “Puli.” In a candid discussion, he emphasized that inappropriate promotional strategies played a pivotal role in the movie’s failure

பிரபல நடிகர் நட்டி (aka) நடராஜன் சமீபத்திய பேட்டியில் புலி படம் தோல்வி அடைந்தது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.

அவர் கூறியதாவது புலி படம் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை பிரமோஷன் செய்த குழு தான்.

actor-natty (1)

படம் ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது. அந்த நோக்கத்திற்கு ஏற்றார் போலவே அந்த படமும் சிறப்பாக உருவாகியிருந்தது.

ஆனால், கடைசியாக அந்த படத்தை ஏதோ ஆக்சன் படம் என்பது போல தவறான முறையில் ப்ரமோஷன் செய்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் பாகுபலி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. ஆக்ஷன் படம் போல ப்ரோமஷன் செய்யப்பட்டதால் புலி படத்தின் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை பாகுபலி படத்திற்கு நிகராக ஒப்பீடு செய்து கொண்டார்கள்.

actor-natty (2)

தவறு ரசிகர்கள் மீது கிடையாது. இந்த படத்தை பிரமோஷன் செய்த தயாரிப்பு நிறுவனத்தின் மீது தான். படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது.

ஒருநாள் விஜய் சார் என்னை அழைத்தார். நாட்டி நான் ஒரு கதை கேட்டிருக்கிறேன். நான் எப்பவுமே வயசு பசங்க.. ஆக்சன்.. செண்டிமெண்ட்.. இப்படித்தான் படம் நடிச்சிட்டு இருக்கேன்.

என்னுடைய சிறு வயது ரசிகர்களுக்காக நான் எதையுமே செய்ததில்லை. ஒரு 6 வயசுல இருந்து 12, 13 வயது வரை இருக்கக்கூடிய சிறுவர்களுக்காக நான் எதுவுமே இதுவரை செய்யவில்லை.

actor-natty (4)

அவர்களுக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்று எனக்கு நீண்ட நாளாக ஆசை இருக்கிறது. அதற்கு இந்த புலி திரைப்படம் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

கதையை கேளுங்கள் என்று கூறினார். நானும் கதையை கேட்டேன். பறக்கும் மனிதன், பேசக்கூடிய காக்கா, பேசக்கூடிய தவளை, பேசக்கூடிய ஆமை, குட்டி குட்டியான மனிதர்கள்.. ஒரு கற்பனையான உலகம்.. இதெல்லாம் அருமையாக இருந்தது.

குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்த படம் பிடித்திருந்தால் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை பார்க்க வருவார்கள் என்ற நோக்கத்தில் தான் படம் எடுத்தோம்.

actor-natty (3)

குழந்தைகளை கவரும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால்,, கடைசியாக இந்த படத்தை ஏதோ ஆக்சன் திரைப்படம் போல ப்ரொமோஷன் செய்து விட்டார்கள். இந்த பிரமோஷனை பார்த்து இந்த படம் பாகுபலிக்கு நிகராக இருக்கும் என்று ரசிகர்கள் கற்பனை செய்து கொண்டார்கள்.

தியேட்டரில் வந்து படம் பார்க்கும்போது ஏமாந்து விட்டார்கள். இதுதான் புலி படம் தோல்வியடைந்ததற்கு காரணமே தவிர வேறு எதுவும் கிடையாது என கூறியிருந்தார்.

ஏற்கனவே பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மாஸ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்று பேசியிருந்தார். அதிலும், அவர் இதே காரணத்தை தான் கூறினார்.

என்ன படமோ..? அதனை நாங்கள் ரசிகர்களுக்கு சொல்லாமல் விட்டு விட்டோம். அந்த படத்திற்கு ஏற்ப ரசிகர்களை தயார் செய்யாமல் விட்டு விட்டோம். அதனால் தான் படம் தோல்வி அடைந்து விட்டது என கூறியிருந்தார்.

அங்கு கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து நான் அடுத்தடுத்த படங்களில் என்னுடைய படத்தை பார்க்கும் வரும் முன்பே இது எப்படியான படம் என்று ரசிகர்களை தயார் படுத்தி விடுகிறேன் என்று பேசியிருந்தார்.

இதன் மூலம் ஒரு படம் எதற்காக எடுக்கப்பட்டது..? எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது..? எப்படி எடுக்கப்பட்டது..? என்பதை உள்ளதை உள்ளபடி ப்ரோமோஷன் செய்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது பிடிக்கும்.

மாறாக இது வேறு ஏதோ மாதிரியான படம் என்பது போல பிரமோஷன் செய்தால் ரசிகர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள் என என்பதை புரிந்து கொள்ளலாம். 

Summary in English : In a recent interview, actor Natty, also known as Natarajan, articulated his perspective on the underwhelming performance of the film “Puli.” He attributed the movie’s failure primarily to ineffective promotional strategies. According to Natty, the marketing campaign did not resonate with the target audience and failed to adequately convey the film’s essence and appeal.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam