நயன்தாராவின் போலியான ட்ராமா..? இந்த ரகசியம் தெரிந்தா காரி துப்புவீங்க..!

நயன்தாராவின் தனுஷ் மீதான குற்றச்சாட்டு இன்று மதியம் முதல் ஒட்டுமொத்த திரையுலகினரையும் இணைய பக்கங்களையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

இதன் பின்னணியில் நடிகர் தனுஷை பலரும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷுக்கு ஆதரவாகவும் தற்போது குரல்கள் தொடங்கி இருக்கின்றன.

பிரச்சனையின் சாராம்சம் என்னவென்றால்..? நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஒரு டாக்குமெண்டரியாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த டாக்குமெண்டரி படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து இசை, சில வீடியோ காட்சிகள், சில பாடல்களை பயன்படுத்த நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான தனுஷிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

ஆனால், தனுஷ் தரப்பில் இருந்து இதற்கு எந்த வித அனுமதியும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. ஆனாலும், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மூன்று வினாடி வீடியோவை அந்த டாக்குமெண்டரியில் நடிகை நயன்தாரா இணைந்திருக்கிறார்.

இதனால் கடுப்பான நடிகர் தனுஷ் நடிகர் 10 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் தன்னுடைய தரப்பில் இருந்து நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இதனால் பதறிப் போன நடிகை நயன்தாரா நடிகர் தனுஷை கடுமையாக வசை பாடி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் தனுஷை எவ்வளவு மோசமாக பேச முடியுமோ அவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார்.

குறிப்பாக அந்த அறிக்கையின் தலைப்பிலேயே நடிகர் தனுஷ் என்று மட்டும் குறிப்பிடாமல். தனுஷ் க ராஜா என்று குறிப்பிட்டு.. தொடர்ந்து கஸ்தூரிராஜாவின் மகனும்.. செல்வராகவனின் தம்பியுமான.. என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் தனுஷிற்கு எந்த தகுதியும் கிடையாது. அவர் ஒரு சினிமா வாரிசு என்பதை நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா. அதாவது நடிகர் தனுஷ் வெறும் நெப்போட்டிச ப்ராடக்ட் என்ற ஒரு கருத்தை உருவாக்க முயற்சி செய்கிறார் நடிகை நயன்தாரா.

அதே சமயம் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தான் முன்னேறினேன் என்பதையும் வெளிப்படையாக பதிவு செய்ய விரும்புகிறார் நயன்தாரா. ஆனால், நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமானபோது சந்தித்த அவமானங்கள் எத்தனை.. கேவலங்கள் எத்தனை.. என்பது அனைவருக்குமே தெரியும்.

பத்திரிகைகள் மட்டுமல்லாமல்.. வெகுஜன சினிமா ரசிகர்களே நடிகர் தனுஷை படு கேவலமாக விமர்சித்தனர். இந்த உடம்பை வச்சிக்கிட்டு நடிக்க வந்துட்டான் என்பதில் ஆரம்பித்து.. எவ்வளோ மோசமாக வசைபாடியுள்ளனர்.

அதை எல்லாம் தாண்டி நடிகர் தனுஷ் எப்படி இவ்வளவு உயரத்துக்கு வந்தார் என்பது வேறு கதை. ஆனால், இன்று அவர் முன்னணி நடிகராக இருக்கிறார்.

தன் தயாரிப்பில் உருவான படத்திற்கு காப்பிரைட் உரிமம் கோருகிறார். நடிகை நயன்தாரா தன்னுடைய கடிதத்தில் அன்பை பரப்புங்கள்.. வெறுப்பை பரப்பாதீர்கள் என்று ஏக வசனம் பேசுகிறார்.

இப்படி அன்பை பரப்ப நினைக்கும் நயன்தாரா அதனை Netflix-ல் மட்டும்தான் தான் பரப்ப முடியுமா..? ஏன் யூ-டியூபில் பரப்ப வேண்டியது தானே..!

Netflix நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு நடிகர் தனுஷ் அதில் ஒரு பத்து கோடி ரூபாய் கேட்டதும் இப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் நயன்தாராவிற்கு நடிகர் தனுஷ் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மோசமான கேள்விகளை எழுப்பி நடிகர் தனுஷுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : So, there’s been quite a buzz lately about Nayanthara and her love for spreading positivity and good vibes, but it seems like she’s chosen Netflix as her go-to platform for that. Fans are scratching their heads, wondering why she’s all about the Netflix love and not really showing the same energy on YouTube.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam