24 மணி நேரமும் அது வேணும்.. நயன்தாரா படுத்தும் பாடு.. தெறித்து ஓடிய தயாரிப்பாளர்.. உண்மையை கூறிய பிரபலம்.!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக அனைவராலும் அறியப்படுபவர் நடிகை நயன்தாரா. முன்பெல்லாம் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்றே தனியாக வரவேற்பு இருந்தது. அதனாலேயே நிறைய திரைப்படங்களில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைத்தனர்.

ஆனால் வர வர நயன்தாராவிற்கான வரவேற்பு குறைந்து வருகிறது. என்னதான் நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்தாலும் அவருக்கும் வயதாகி வருகிறது. இந்த நிலையில் இந்த இடைவெளியை இளம் கதாநாயகிகள் பூர்த்தி செய்து வருகின்றனர்.

24 மணி நேரமும் அது வேணும்

மேலும் இளம் நடிகைகளை நடிக்க வைப்பதன் மூலம் சம்பள விஷயத்திலும் பட்ஜெட் கிடைக்கும் என்பதால் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் நயன்தாராவை ஒதுக்க துவங்கியிருக்கின்றனர். இது மட்டுமின்றி நயன்தாரா செய்யும் சில காரியங்களும் அவரை தயாரிப்பாளர்கள் ஒதுக்க காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தனக்கு குழந்தை பிறந்தது முதலே நயன்தாரா சினிமா துறையில் ஒழுங்காக பங்கெடுப்பது கிடையாது என்று கூறப்படுகிறது. எப்போதெல்லாம் குழந்தைகளின் ஞாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் படப்பிடிப்பை விட்டு விட்டு இவர் குழந்தையை பார்க்க சென்று விடுகிறார்.

நயன்தாரா படுத்தும் பாடு

இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் குழந்தையை கொண்டு வந்து படப்பிடிப்பு தளத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். இங்கேயே வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கின்றனர். இதனை அடுத்து நயன்தாரா தன்னுடைய இரு பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள இரண்டு ஆயாக்களை நியமித்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் உணவுகளில் தொடங்கி அந்த ஆயாக்களுக்கான சம்பளம் வரை அனைத்தையும் தினசரி தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. இது தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஓடிய தயாரிப்பாளர்

அவரோடு வரும் பவுன்சர்கள் செக்யூரிட்டிகள் மற்றும் நயன்தாரா செய்யும் மேக்கப் உணவுகள் என்று ஏற்கனவே அவருக்கே பல செலவுகளை தயாரிப்பு பக்கத்தில் இருந்து செய்ய வேண்டி இருக்கிறது. இது இல்லாமல் 24 மணி நேரமும் குழந்தைகளுக்கு தனி கேரவன் வேண்டும் என்கிறாராம்.

இந்த நிலையில் இது பத்தாது என்று இப்பொழுது அவரது குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கும் தயாரிப்பாளர்தான் சம்பளம் ஒரு தர வேண்டும் என்பது சரி கிடையாது என்று யோசித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.இதனாலேயே அடுத்தடுத்து நயன்தாராவை கமிட் செய்த தயாரிப்பாளர்கள் சிலர் அதிலிருந்து விலகி இருக்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam