Nayanthara, the popular actress known for her captivating performances, recently opened up about her separation from Prabhu Deva, and it’s got everyone talking.
நடிகை நயன்தாரா நடித்த கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் அன்னபூரணி ஹிந்தியில் ஜவான் திரைப்படம் வெளியானது.
இந்த இரண்டு படங்களில் நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை எட்டியது.
அடுத்ததாக நடிகை நயன்தாரா ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் பிரபல ஆங்கில youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை நயன்தாரா அதில் பேசியுள்ள விஷயங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அந்த பேட்டியில் அவருக்கு குறிப்பிட்ட சில முக்கியமான விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் பேசிய ஒரு விஷயம் என்னவென்றால் சினிமா துறையில் இரண்டு திருமணங்களை நிறைய பார்த்திருக்கிறேன்.
அதை எல்லாம் நான் தவறு என்று சொல்லவில்லை. சினிமா துறை அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால், அப்படிப்பட்ட உறவுகள் எல்லாம் சரியானவை தான் என்று நான் அப்போது நினைத்திருந்தேன்.
அதுதான் என்னுடைய நிலைப்பாடு ஆகவும் இருந்தது. ஆனால், தற்போது என்னுடைய பார்வை மாறியிருக்கிறது என பேசியிருக்கிறார் நடிகை நயன்தாரா.
தொடர்ந்து பேசியவர் திருமணத்திற்கு பிறகு எந்த பிரச்சினையும் சிக்காமல் இருந்தேன். என்னுடைய ஆவணப்படம் காரணமாக எனக்கும் தனுஷுக்கும் ஏற்பட்ட சிக்கலால் மீண்டும் என்னை சுற்றி சர்ச்சைகள் எழுந்தன.
அந்த பிரச்சனை தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது என கூறினார். தொடர்ந்து நடிகர் பிரபுதேவாவை மறைமுகமாக தாக்கி பேசியிருகிறார் நடிகை நயன்தாரா. ஒரு கட்டத்தில், நான் சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று ஒருவரால் நிர்ப்பந்திக்கப்பட்டு அந்த சமயத்தில் அது எனக்கு சரி என்று பட்டதால் சினிமாவில் இருந்து விலக ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அடுத்தடுத்து நாட்களில் எனக்கு உண்மை என்ன என்று தெரியவந்தது. இன்னொருவரின் வற்புறுத்தலின் பேரில் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை நாம் தவறி விட வேண்டுமா..? என்று யோசித்தேன் எனவும் கூறியிருக்கிறார்.
Summary in English : Recently, Nayanthara opened up about her decision to part ways with Prabhu Deva, and it’s been quite the talk of the town! In a candid interview, she shared that the relationship felt more like a rollercoaster ride than a happily-ever-after.