அட இது வேறயா.. நயன்தாராவ கேவலப்படுத்திய நமீதா.. பதிலடி கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார்? 

நடிகை நயன்தாரா நமீதா தன்னிடம் பேசுவதை நிறுத்திவிட்ட விஷயத்தைப் பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அப்படித்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய நயன் நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளிவந்தது. 

nayan mordern dress

இந்த திரைப்படம் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை தராதவை அடுத்து பாலிவுட் இவர் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டு பல பாலிவுட் பட வாய்ப்புக்களை பெற்று தந்தது. 

அட இது வேறயா.. நயன்தாராவ கேவலப்படுத்திய நமீதா..

தற்போது இவர் கைவசம் ராக்காயி, மண்ணாங்கட்டி, டாக்சிக் உள்ளிட்ட பல படங்கள் உள்ள நிலையில் ஹிந்திலும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது. 

மேலும் நேற்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு Nayanthara beyond the fairy tale என்ற ஆவணத் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. நடிகைகளிலேயே அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகையாக திகழும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். 

ஹிந்தியில் ஜவான் படத்தில் நடித்ததை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அது போல தமிழ் மற்றும் கன்னட படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். 

namitha

அத்தோடு மலையாள படத்தில் நடித்து வரும் இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து வாடகை தாயின் மூலம் உயிர் உலக்கென்று இரண்டு மகன்களை பெற்றிருக்கிறார். 

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல தொழில்களில் முதலீடு செய்யும் பல நிறுவனங்களை நடத்தி வரக்கூடிய இவர் ஒரு மிகச்சிறந்த தொழில் முனைவோராகவும் விளங்குகிறார். 

இந்நிலையில் இவரது ஆவணப்படம் வெளிவந்து பல்வேறு கருத்து விமர்சனங்களை பெற்ற நிலையில் இவருக்கும் தனுஷுக்கும் முட்டிக்கொண்ட விவகாரங்கள் இணையங்களில் பெரும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் வெளிவந்தது. 

பதிலடி கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார்..

இந்நிலையில் பில்லா பட சூட்டிங் இல் நடிகை நமீதா தன்னை அசிங்கப்படுத்தியதாக அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது ட்ரெண்டிங் ஆகி உள்ளது. 

அந்தப் பேட்டியில் அவர் அஜித்துடன் நான் நடித்த பில்லா படத்தின் போது ஆரம்பத்தில் நமீதா விற்கும் எனக்கும் உறவு நன்றாகத்தான் இருந்தது. 

இதைத்தொடர்ந்து இருவரும் மிக நன்றாக பேசிக்கொண்டு தான் வந்தோம். ஆனால் திடீரென ஒரு நாள் நமீதா என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். 

அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுக்குள் பெரிய பிரச்சனையோ, சண்டையோ எதுவுமே நடக்கவில்லை. 

billa film

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் போது அனைவரிடமும் ஹாய் சொல்லும் அவர் எனக்கு மட்டும் சொல்ல மாட்டார். இதை தொடர்ந்து ஒரு கட்டத்தில் எங்கள் இருவருக்குள்ளும் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. 

இதை அடுத்து நானும் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். மற்றவர்கள் நம்மிடம் பேச தயங்கும் போது நாம் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு என்ன பிரச்சனையோ என்று எண்ணி விலகி விட்டேன் என்று கூறி இருக்கிறார். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாகி விட்டது. 

Summary in English: In a recent chat, Nayanthara opened up about her relationship with actress Namitha, and it seems there’s a bit of tension there. When asked why they’re not on speaking terms, Nayanthara kept it real, hinting at some past misunderstandings that have led to their current silence. It’s always interesting to hear behind-the-scenes stories from our favorite stars, and this one definitely has fans buzzing.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam