இதை கழட்டியதால் தான் வாய்ப்பு கெடைச்சது.. அந்த நடிகரே சொன்னாரு.. ஒப்புக்கொண்ட நீலிமா ராணி..!

நடிகை நீலிமா ராணி சீரியல் சினிமா என இரண்டு தலங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிக்க தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் பண்ணையாரும் பத்மினியும் கதையை முழுமையாக கேட்ட பிறகு அந்த கதை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் நாம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த படத்தில் நான் மட்டும்தான் மோசமான கதாபாத்திரம்.

இப்படி அருமையான ஒரு கதையில் இப்படியான மோசமான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடிக்க வேண்டுமா..? என்று தயங்கினேன் யோசித்தேன்.

அந்த நேரத்தில், நடிகர் விஜய் சேதுபதியே எனக்கு போன் செய்தார். நீலிமா இது உங்களுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும் படம்.

கண்டிப்பாக இந்த கதாபாத்திரம் உங்களுக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும் என்று கூறினார்.

அந்த கதாபாத்திரம் அந்த அளவுக்கு ஒரு தாக்கம் நிறைந்தது. ஏனென்றால், வீட்டிற்கு வரும்போது எல்லாம் ஏதாவது ஒன்றை எடுத்து சென்று விடுகிறாள்.. எப்போது அந்த காரை எடுத்து செல்வாள் என்ற எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் இருப்பார்கள்.

ஒரு திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் நன்றாக உள்வாங்கிக் கொள்வார்கள்.

கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்க்கும் நல்ல ஸ்கோப் கிடைக்கும் என்பதை உணர்ந்ந்து கொண்டு எனக்குள் இருந்த அந்த தயக்கத்தை கழட்டி வைத்தேன். உடனே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என கூறியிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam