அது முடியாதா? Proof பண்ணிட்டா.. செருப்படி பதில் தந்த நெப்போலியன் மகன்.. வாய் மூடிய ஹேட்டர்ஸ்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஹீரோவாக உலா வந்த நடிகர் நெப்போலியன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சீவலப்பேரி பாண்டி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு தமிழக மக்கள் மத்தியில் இன்று வரை தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட அற்புத மனிதர்.

என்ன அது முடியாதா? Proof பண்ணிட்டா..

இவர் திரைப்படங்களில் சிறப்பான முறையில் நடித்துக் கொண்டிருந்த போதே திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு தனது மகனின் எதிர்காலம் பற்றி அக்கறை கொண்டதால் அமெரிக்காவில் சென்று செட்டிலானார்.

இந்நிலையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ மாட்டார்கள் என்ற கருத்தை உடைத்து எறியக்கூடிய வகையில் இவரது மகன் தற்போது நீண்ட நாள் வாழ்ந்து இருக்கிறார். அத்தோடு இவருக்கு விரைவில் திருமணமும் நடக்க உள்ளது.

எனவே இந்த திருமணத்தைப் பற்றி பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை இணையங்களில் வெளியிட்டு வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதில் சில பாசிட்டிவ் கமண்டுகளும், அதிக அளவு நெகட்டிவ் கமெண்ட்டுகளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பணத்துக்கு பலியாகி விட்டார்கள் என்பது போன்ற கருத்துக்களும் உலா வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்து தற்போது திருமணம் ஜப்பானில் நடக்க இருக்கக்கூடிய சூழ்நிலையில் தன்னை பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக தனுஷ் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

செருப்படி பதில் தந்த நெப்போலியன் மகன்..

மேலும் வரும் நவம்பர் மாதம் தனுஷின் திருமணம் கோலாகலமாக ஜப்பானில் நடைபெற உள்ள சூழ்நிலையில் தனுஷ் தன் திருமணம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு இது வரை மௌனம் சாதித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் அந்த மௌனத்தை விடுத்து செருப்படி பதிலை பலருக்கும் தெரிவிக்கக் கூடிய வகையில் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் எல்லோருக்கும் வணக்கம் எனது திருமண வாழ்த்து தெரிவித்த பலருக்கு மிக்க நன்றி என்று சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து இதில் நிறைய பேர் பாசிட்டிவாக பேசியிருந்தீர்கள். சிலர் என் திருமணம் குறித்து நெகட்டிவ்வாக பேசி இருந்தீர்கள். நான் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை எல்லாவற்றையும் மோட்டிவேஷனாக தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வாய் மூடிய ஹேட்டர்ஸ்..

என் திருமணம் பற்றி பேசியவர்களிடம் நான் ப்ரூப் செய்து வென்று காட்டியாக வேண்டும் என்ற முடிவில் தற்போது இருக்கிறேன். அதை ப்ரூப் பண்ணி விட்டு உங்களிடம் பேசுகிறேன். என்னை போல் இருக்கும் நிறைய பேர் இதை செய்ய முடியாது அதை செய்ய முடியாது என்று சொல்லுகிறீர்கள்.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக தொடர்ந்து நம்பிக்கையோடு முயன்று கொண்டே இருப்பேன் என்று கூறி இருக்கிறார். தனுஷின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி பேசும் பொருளாகிவிட்டது.

இதை அடுத்து தனுஷை பற்றி பேசியவர்கள் ஹேட்டர்ஸ் தற்போது வாய் மூடி மௌனிகளாய் மாறி இருப்பதை பார்த்து இணையதள வாசிகள் அமைதியாகி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.