“சீனாவில் அறிமுகமாகும் விவோ பேட் 2 மாடல்..!” – புதுசு கண்ணா புதுசு..!

விவோ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலை தற்போது அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் விவோ பேடுக்கு அடுத்தபடியாக தற்போது விவோ பேட் 2 என்ற மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் புதிய அப்டேட்டுகள் அதிக அளவு இருக்கும் என தெரியவந்துள்ளது.

முதல் முதலாக சீனாவில் அறிமுகமாகும் இந்த vivo பேட் 2 அடுத்த கட்டமாக மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். அலுமினிய பாடியால் செய்யப்படும் இந்த டேப்லெட் மாடலானது மிகவும் அருமையாக உள்ளது. இனி vivo பேட் 2 மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

VIVO Pad 2

இந்த மாடலானது 12.1 இன்ச் மற்றும் 2.8.கே LCD டிஸ்ப்ளே வை கொண்டுள்ளது. மேலும் இது 2800×1968 பிக்சல்  கொண்டது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. மேலும் HDR 10 ஆதரவு 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தோடு  டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

இதனை பார்க்கும் போதே மிகப்பெரிய டிஸ்ப்ளேவாக இருப்பதால் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எல்லோருமே பார்த்ததும் கணித்து விட்டார்கள். 3.05 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர், டைமன் சிட்டி 9000 மற்றும் 4 என்எம்  பிராசசர் உடன் மாலி-ஜி 70 10 கோர் ஜி பி யு வசதியை கொண்டுள்ள எந்த விவோ பேக் டு மாடல் மிகச்சிறந்த மாடலாக உள்ளது. மேலும் இதில் உள்ள ப்ரவுசர் சிறந்த செயல் திறனை வழங்க அதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.

மேலும்  இதில் origin ஒஎஸ் 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளதால் மிகவும் சிறப்பாக செயல் புரியும் ஆற்றல் கொண்டிருக்கும்.

VIVO Pad 2

அதுமட்டுமல்லாமல் இதில் எட்டு ஜிபி 12 ஜிபி ராம் மற்றும் 12 ஜிபி 256 gb 512 gb ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டு வரக்கூடிய எந்த விவோ டேப்லட் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும்.

கேமராவை பொருத்தவரை 13 எம்பி ப்ரைமரி கேமரா பிளஸ் 2 என் டி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியல் கேமரா அமைப்பை கொண்டுள்ள எந்த விவோ பேட் 2 மாடல் புகைப்படங்களை அட்டகாசமாக எடுக்கக்கூடிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

VIVO Pad 2

மேலும் இந்த vivo பேட் 2  நீங்கள் செல்பிகளையும், வீடியோ அழைப்புகளையும் மிக நேர்த்தியான முறையில் செய்யமுடியும். இதற்கு என்றே 8 எம்பி கேமராவை இவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்.

பேட்டரியை பொருத்தவரை பத்தாயிரம் எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்ட அமைப்பு இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் மாடலில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் வசதி இருந்தாலும் இது 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது அட்டகாசமான அமைப்பாக உள்ளது. இதை தவிர யூஎஸ்பி டைட்டில் ஆடியோ மற்றும் குவாட் ஸ்பீக்கர்களுடன் இந்த புதிய மாடல் வெளிவந்துள்ளது.

இளைஞர்களின் மனதை கவரும்படி வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் விரைவில் இந்தியாவிற்கும் அறிமுகப்படுத்தும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam