“அங்க,.. நான் மட்டும் தான் முழுசா ட்ரெஸ் போட்டு இருந்தேன்…” – இளமை கால புகைப்படத்தை வெளியிட்ட நியூஸ் ரீடர் ரத்னா..!

பிரபல தனியார் தொலைகாட்சியில் கிட்ட தட்ட 30 வருடங்கள் செய்தி வாசிப்பாளர் மற்றும் திரை விமர்சகர் என பயணித்து வரும் நியூஸ் ரீடர் ரத்னா-வை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 90-ஸ் கிட்ஸின் அபிமான நியூஸ் ரீடர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரத்னா அவர்கள் தான். 1989-ம் ஆண்டு பொதிகை சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

தனியார் தொலைகாட்சிகளே இல்லாத கால கட்டம். கிட்ட தட்ட 250 பேர் கலந்து கொண்ட செய்தி வாசிப்பாளர் நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளார் ரத்னா அவர்கள். இறுதியில், ரத்னா உட்பட மூன்று பேர் மட்டும் செய்தி வாசிப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சில வருடங்கள் பொதிகையில் வேலை செய்த இவர் அதன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு குடும்ப வாழக்கையில் ஐக்கியமானார்.

ஆனால், தனியார் தொலைகாட்சிகளின் ஆதிக்கம் ஆரம்பம் ஆன பிறகு சன் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இணைந்து இன்று வரை பணியாற்றி வருகிறார். மேலும், பல படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்தும் உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாவுல நடிக்கிற வாய்ப்பும் பல முறை வந்தும் அதை மறுத்துட்டேன்.

ஆனா சினிமாவுல செய்தி வாசிக்கிற மாதிரியான காட்சிகள்ல நான்தான் நிறையவே தோன்றியிருக்கிறேன். இப்படி 28 வருஷமா மீடியா தொடர்புல இருந்தாலும், இது பார்ட் டைம் வொர்க்தான். ஊடக பயணம் தொடங்கிய சமயத்தில் தனியார் நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் வேலையும், அடுத்து அரசு நிறுவனத்தில் பல வருஷம் மார்க்கெட்டிங் வேலையும் செய்தேன்.

இப்போது கடந்த 12 வருஷமா கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் வேலையைப் பெரிய அளவுல செய்துகிட்டு இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் கேட்கும் ஆடை வகைகளை, மற்ற இடங்களில் இருந்து வாங்கி சேல்ஸ் பண்ணிகிட்டு இருக்கேன். நேரத்தைச் சரியா பயன்படுத்தி மீடியா, பிசினஸ், இசை, தியானம், யோகான்னு எப்போதும் மகிழ்ச்சியோடு இயங்கிட்டு இருக்கிறேன் என்று கூறினார்.

இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில், தன்னுடைய இளமை கால புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,  கடற்கரையில் அலை மோதும் படி படுத்துள்ளார். மேலும், கோவாவின் அழகான கடற்கரைகளில் ஒன்றில்.. நான் மட்டும் தான் முழுசா ட்ரெஸ் போட்டுகிட்டு இருந்தேன்.. எண்ணற்ற வெளிநாட்டினர் பயங்கர காமெடியா சுத்திட்டு இருந்தாங்க.. என்று கேப்ஷனும் வைத்துள்ளார்.

---Advertisement---