அடுத்த Divorce இவங்களா? அதிகரிக்கும் விரிசல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடிகள் தொடர்ந்து அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருவது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள் .

நட்சத்திர ஜோடிகளின் விவகாரத்து:

குறிப்பாக தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படியாவது உங்களது மகன்களுக்காவது நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் .

இதனால் சூப்பர் ஸ்டார் மிகுந்த வேதனையில் இருப்பார். அவருக்கு கடைசி காலகட்டத்தில் இத்தனை கஷ்டங்கள் கொடுக்க வேண்டாம். எனவே தயவுசெய்து சேர்ந்து வாழுங்கள் என தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் ரசிகர்கள் கெஞ்சி கேட்டுக் கொண்டனர் .

அந்த விவாகரத்து ஆறுவதற்குள் அடுத்ததாக பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி காதல் ஜோடியின் விவாகரத்து அரங்கேறியது .

ஆம், இவர்கள் இருவரும் பல வருடங்கள் காதலித்து திரைப்படங்களில் ஒன்றாக பாடி உருகி உருகி காதலித்து ரசிகர்களின் பிரபலமான பேவரைட் ஜோடிகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்தார்கள் .

இவர்களின் விவாகரத்து அறிவிப்பும் ரசிகர்களால் எதிர்பார்க்க முடியாத அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் சைந்தவி எப்போதும் ஜிவி பிரகாஸுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்.

பொது மேடையில் கூட சார் சார் என்று தான் சைந்தவி ஜிவியை அழைப்பார். அந்த அளவுக்கு மிகுந்த மரியாதை, அளவு கடந்த அன்பு , காதல் எல்லாம் இருந்தும் இவர்கள் ஏன் விவாகரத்து செய்தார்கள்? என்ன காரணம்? நான்கு வயதில் குழந்தை இருக்கும் போது இப்படியா என பலரும் அதிர்ந்து போய்விட்டார்கள்.

இதே போல் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா காதல் ஜோடியின் விவாகரத்து தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை உருக்குலைய செய்தது .

காதல் ஜோடிகள் மீது நம்பிக்கை இழந்த ரசிகர்கள்:

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு மிகச்சிறந்த காதல் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

சமந்தா அவர் மீது வைத்திருந்த காதலை பல பேட்டிகளில் நேர்காணலில் கூட வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இப்படி இருந்த ஜோடி திடீரென விவாகரத்து அறிவித்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாக சைதன் வேறொரு நடிகை காதலித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது பெயர் அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் பலரும் நாக சைதன்யாவை விமர்சித்து வந்தனர் .

இந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் அமைதியான சிறந்த ஜோடியாக ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியாகவும் பார்க்கப்பட்டு வந்த ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பேரதிர்ச்சியை கொடுத்தார்கள் .

ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிந்ததாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டாலும் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்க வைத்து வருகிறார்கள் .

அடுத்தது ஜோதிகா – சூர்யா விவாகரத்து?

இப்படி இருக்கும் சமயத்தில் அடுத்ததாக பிரியப் போவது சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வந்து அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது .

அதற்கான காரணமும் தற்போது கூறப்பட்டிருக்கிறது. அதாவது சூர்யாவின் மகளான தியா அண்மையில் ஒரு ஆவண படத்தை இயக்கியிருந்தார்.

அது குறித்து நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் இயக்கிய ஆவணப்படத்தின் போஸ்டரையும் மகள் வென்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

ஆனால், அதில் சூர்யாவை டேக் செய்யவில்லை. அவரை குறித்து கேப்ஷனில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.

இதே போல் நடிகர் சூர்யா இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட போது கூட தன்னுடைய மகன் குறித்து பெருமையாக “உனது அப்பா என்பதில் பெருமை கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார் .

ஆனால், சூர்யா ஜோதிகாவை குறித்து கேப்ஷனில் எதுவும் எழுதவில்லை. மேலும் ஜோதிகாவுக்கு டேக் செய்யவும் இல்லை . இது எல்லாம் ரசிகர்களுக்கு சந்தேகத்தை வலுவடையச் செய்திருக்கிறது.

சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்குள் ஏதோ ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னும் சிலம் வாரங்களில் அடுத்த விவாகரத்து இவர்களாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி அதிர்ச்சியை. ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

என்ன இருந்தாலும் பிரச்சனை சீக்கிரம் சரியாகி அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல பதிவையும் புகைப்படங்களையும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தான் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருகிறார்கள்.

இதனால் ஜோதிகா சூர்யாவின் விவாகரத்து வதந்தியும் உண்மையாகிவிடுமோ? என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version