சன் டிவி புகழ் கண்ணான கண்ணே தொடரில் நடித்த நிமிஷிகா தனக்கு நடந்த கேஸ்டிங் கவுச்சு (Casting couch) பற்றி ஓப்பனாக பேசியிருக்க கூடிய விபரங்கள்.
சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகளுக்கு தற்போது பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளின் பிரபலம் கிடைத்திருப்பதால் அவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது என்று சொல்லலாம்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் மீரா கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை நிமிஷிகா பற்றி உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அந்த வார்த்தைக்கு அப்போ அர்த்தம் தெரியல..
இவரின் இந்த சீரியலை பெண்கள் மட்டுமல்ல இளைஞர்களும் அதிக அளவு பார்த்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு ஆர்மி, நேவி என்றெல்லாம் உருவாக்கி அவருக்கு ஆதரவு தந்து மகிழ்ந்தார்கள்.
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் திரையுலத்தில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் போல சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட் உண்டா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் சற்றும் முகம் மாறாமல் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது இதற்கு காரணம் இது போன்ற சம்பவம் அவருக்கும் நடந்ததாக கூறி தான் அந்த அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
அந்த வகையில் சீரியல் வாய்ப்புகளை தேடி வந்த சமயத்தில் இயக்குனரின் மேனேஜர் ஒருவர் தன்னிடம் போனில் உங்களை அந்த சீரியலில் நடிக்க ஓகே செய்ய வேண்டும் என்றால் நீங்கள் காஸ்டிங் கவுச்சுக்கு (Casting couch) ஒத்துக்கொள்வீர்களா என்று கேட்டார்.
அப்புறம் தான் புரிஞ்சது நிமிஷிகா ஓபன் டாக்..
அப்படி அவர் கேட்டபோது ஆரம்பத்தில் அவர் எது பற்றி கேட்கிறார் என்பதை புரியவில்லை அதை ஓபன் ஆகவே அவரிடம் எனக்கு புரியவில்லை என்று சொன்னவுடன் உங்கள் தோழிகளிடம் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார்.
இதைத் தொடர்ந்து நான் என் தோழிகளிடம் இந்த வார்த்தையை சொல்லி இதற்குரிய அர்த்தத்தை கேட்டபோதுதான் எனக்கு விவரம் புரிந்தது அப்படி விவரம் புரிந்த சமயத்தில் அந்த ஆளை கையில் கிடைத்திருந்தால் அடித்துக் கொல்ல வேண்டும் போல் என் மனதில் ஆத்திரம் ஏற்பட்டது.
எனினும் அப்படியெல்லாம் செய்தால் வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் அதற்கு நான் மறுத்து விட்டேன் என்று சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்த தான் ரசிகர்கள் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியானார்கள்.
அதுமட்டுமல்லாமல் எந்தவித தயக்கமும் இல்லாமல் எந்த விஷயத்தை ஓபன் ஆக சொன்னது அதற்கு ஒரு தைரியம் வேண்டும் அந்த தைரியம் இவரிடம் உள்ளது என்று பலரும் பேசி வருகிறார்கள்.
Summary in English: In a recent open talk, Nimeshika bravely tackled the often-taboo subject of the casting couch in small screen serials. It’s a conversation that many shy away from, but she believes it’s crucial to shed light on this issue. Nimeshika shared her experiences and insights, emphasizing how young actors can sometimes find themselves in uncomfortable situations just to land a role.