அந்த விஷயம் குறித்து என்கிட்ட பேசுவார்.. தனுஷ் உடனான என்னுடைய உறவு.. மனம் திறந்த நடிகை நித்யா மேனன்.!

என்னதான் தமிழ் சினிமாவில் காதல் விவகாரங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக இருந்தாலும் கூட நடிப்பில் ஈடு இணையற்றவராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ்.

தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடிக்க கூடியவராக தனுஷ் இருந்து வருவதாலேயே தனுசுக்கு இருக்கும் மார்க்கெட் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த விஷயம் குறித்து என்கிட்ட பேசுவார்

பொதுவாக கமர்சியல் ஹீரோவாக மாறிய பிறகு நடிகர்கள் சண்டை படங்களில் மட்டுமே தொடர்ந்து நடிப்பதை பார்க்க முடியும். குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள். ஆனால் தனுஷை பொருத்தவரை அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வகையாக இருக்கும்.

அதனால் விஜய் அஜித் படம் மாதிரி தனுஷ் படம் ஒரு சண்டை படமாக இருக்கும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு திருச்சிற்றம்பலம் திரைப்படத்தைக் கூறலாம். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷிற்கு ஒரு சண்டை காட்சிகள் கூட இருக்காது.

என்னுடைய உறவு

அதேபோலத்தான் தங்க மகன் திரைப்படம். இப்படி குடும்ப பாணியிலான திரைப்படங்களையும் அவ்வப்போது தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் மற்றும் அவர் படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் வெளிவருவது உண்டு.

அப்படியாக நித்யா மேனன் குறித்தும் சில சர்ச்சைகள் வெளிவந்து இருந்தன இத்தனைக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மிக நெருக்கமான கட்சிகள் கூட இவர்கள் இருவருக்கும் இல்லை என்றாலும் கூட பொதுமக்கள் மத்தியில் இது குறித்து ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது.

நடிகை நித்யா மேனன்

அதற்கு ஏற்றார் போல அடுத்து தனுஷ் இயக்கும் இட்லி கடை திரைப்படத்திலும் நித்யா மேனன்தான் கதாநாயகியாக நடிக்கிறார் இந்த சர்ச்சைகளுக்கு நடுவே இதற்கு பதில் அளிக்கும் வகையில் நித்யா மேனன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

அதில் நித்யா மேனன் கூறும் பொழுது தனுஷ்க்கும் எனக்கும் இருப்பது ஒரு நட்பு ரீதியான உறவு தான் என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் எனக்கு ஏற்ற மாதிரியான வித்தியாசமான கதாபாத்திரங்களை அவர் உருவாக்குகிறார்.

அதனை பிறகு என்னிடம் வந்து விவரிக்கிறார். தனுஷின் திரைப்படங்களில் நடிக்கும் போது ஒரு புது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் என்னிடம் அவர் கதை கூறும் பொழுது அதில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்றும் கேட்பார்.

பெரும்பாலும் அந்த அளவிற்கு யாரிடம் இதையெல்லாம் கேட்க மாட்டார் அந்த அளவிற்கு எனக்கும் அவருக்குமான பழக்கம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நித்யா மேனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version