ஏன்டா அரசியலுக்கு வந்தோம்.. புலம்பும் நடிகர்.. பேருக்கு தான் தலைவர்.. மத்தபடி டம்மி பீஸ்..!

தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு அரசியல் ஆசை ஒருவருக்கு வரவில்லை என்றால் தான் அந்த நடிகரை அதிசயமாக பார்ப்பார்கள். அப்படித்தான் உச்ச நடிகராக இருந்த ஒருவர் தன்னுடைய அரசியல் ஆசையை சமீபத்தில் நிறைவேற்றினார்.

புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியவர் நான் டீசன்டாக அரசியல் செய்யப் போகிறேன் என்று தன்னுடைய ரசிகர்களை ஒன்று திரட்டி மாஸ் காட்டினார்.

அவருடைய பேச்சை நம்பி தமிழ்நாடு முழுதும் போஸ்டர்கள், பேனர்கள், துண்டு பிரசுரங்கள் என களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

நாடு முழுதும் உள்ள ஊர்களில் கொடிக்கம்பங்களை நடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், கொடுமை என்னவென்றால்.. கட்சிக்குள் இருக்கும் சில முக்கிய தலைகள் தங்களுடைய தலைவர் ஒரு டம்மி பீஸ் என்பது போலவே பேசி வருகிறார்களாம்.

இது சார்ந்த ஆதாரங்கள் அடக்கிய வீடியோ ஆடியோக்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. உச்ச நடிகராக இருந்த அவர் தமிழ்நாட்டு அரசியல் களத்தினை மாற்றுகிறேன் என்ற முழக்கத்துடன் அரசியலில் தொபுக்கட்டீர் என குறித்தார்.

அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததையும் பார்க்க முடிகிறது. ஏற்கனவே அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டு அரசியலுக்கு நம்ம பாடி எல்லாம் தாங்காது என்று கூறி வந்த வழியில் அப்படியே நடையை கட்டினார் பெரிய நடிகர்.

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கியவர் தான் அந்த நடிகர். கட்சியை தொடங்கிய பின்பு ஏற்கனவே இருக்கக்கூடிய கட்சிகள் மீது பரபரப்பான அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் கட்சி நிலை நிறுத்தவும் அரசியல் வட்டாரத்தை சூடு பிடிக்கும் செய்வார் என்று மத்தாப்பு சுற்றிக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கு அல்வா கொடுத்து விட்டார்.

மக்கள் பிரச்சனை பற்றி பெரிதாக பேசுவதில்லை. களத்திற்கு வருவதில்லை. எந்த அரசியல் தலைவரையும் தாக்கி பேசுவதில்லை. ஆனால், மாற்றுக் கட்சியினர் அவர்களுடைய தலைவர்கள் களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னுடைய சொந்தக் கட்சியில் இருப்பவர்களை பற்றிய விமர்சித்து கொண்டு இருக்கிறார். தன்னுடைய நம்பிக்கையை பெற்ற ஒருவருக்கு கட்சியில் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து அமர வைத்திருக்கிறார். ஆனால், தற்போது அந்த பொறுப்பு கொடுக்கப்பட்ட தலைகளை சந்திப்பதற்கு கூட நேரமில்லாமல் முகத்தை கூட காட்டாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்காத நிர்வாகிகள் கட்சிக்குள்ளேயே போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். ஆனால், அதையும் கூட கண்டுகொள்ளாமல் தன் மீது விமர்சனங்களை வைத்த நிர்வாகிகளை மட்டும் வரச் சொல்லி ஒரு கடிதத்தை அனுப்பி இருக்கிறாராம்.

அந்த கடிதத்தை நம்பி அலுவலகத்திற்கு சென்ற நிர்வாகிகளுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. என்ன காரணம் என்றால்.. அப்போதும் தலைவர் வந்து அவரை பார்க்கவில்லை. இதனால் மணமுடைந்த நிர்வாகிகள் இந்த கட்சிக்கு யாருப்பா தலைவர்..? மெய்யாலுமே அந்த நடிகர் தான் தலைவரா..?

இல்ல, அந்த நடிகர் டம்மி பீஸா..? கட்சியை ஆரம்பித்து வைத்துவிட்டு என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்..? அடுத்த வருடம் தேர்தல் என புலம்பல் மேல் புலம்பல்களை பதிவு செய்து வருகிறார்களாம்

இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த தலைவர் களத்திற்கு இப்போ வரேன்.. அப்போ வரேன்.. எப்போ வேணாலும் வருவேன்.. என வெறும் வார்த்தையை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற மிகுந்த ஏக்கத்துடன் இருக்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகிகளின் சண்டையை பார்த்த நடிகர்.. இவங்கள நம்பியா கட்சியை ஆரம்பிச்சோம் என புலம்பி கொண்டிருக்கிறாராம்.

Tamizhakam