Site icon Tamizhakam

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..! கண் விழித்திருக்கும் போதே நடந்த விஷயம்..! வெளியான புதிய தகவல்..!

68 வயதாகும் நடிகர் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அறியப்படும் ஒருவர். இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரபல நடிகர் சிவாஜியின் வாரிசாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் தனித்து நின்றவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் தன்னுடைய தந்தையின் சாயலை பின்பற்றாமல் நடித்து தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நடிகர் பிரபு.

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும் நடிகராக அறிமுகமான இவருக்கு ஆரம்பத்தில் நடிகர் சிவாஜி எந்த உதவியும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் பிரபு நடிகர் ஆவதை சிவாஜி விரும்பவில்லை. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தன்னுடைய மகனின் ஆசைக்காக அவரின் சினிமா ஆசைக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி என்ற படத்தில் அறிமுகமான பிரபு ஆரம்பத்தில் இருந்தே மிகவும் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.

ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து அசத்தினார். இதில் அதிசய பிறவிகள், சின்னஞ்சிறுசுகள், கோழி கூவுது போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.

1983 ஆம் ஆண்டில் பத்து படங்களில் ஹீரோவாக நடித்தார் தொடர்ந்து 15 ஆண்டுகள் படு பிஸியாக ஹீரோவாக இருந்த இவருக்கு சின்னத்தம்பி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இயக்குனர் வாசு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இவருக்கு தமிழக அரசின் விருதை பெற்று தந்தது. கடந்த ஆண்டு PT சார் என்ற படத்தில் நடித்த நடிகர் பிரபு இந்த ஆண்டு அஜித் நடிப்பில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மிகவும் சுறுசுறுப்பான மற்றும் கலகலப்பான நடிகராக அறியப்படும் இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக நடிகர் பிரபு கண் விழித்திருக்கும் போதே இந்த சிகிச்சை நடைபெற்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து நடிகர் பிரபு ஓய்வில் இருந்து வருவதாகவும் அவர்களுடைய குடும்பத்தினர் அவரை கவனித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தாலும் மறுபக்கம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருப்பது அவர்களுக்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது. நடிகர் பிரபு விரைவில் பூர்ண நலம் பெற வேண்டி ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Actor Prabhu has just gone through a successful brain surgery, and we’re all breathing a sigh of relief! After some time in the hospital, he’s finally been discharged and is back home where he can focus on his recovery. His family is rallying around him, providing all the love and support he needs during this time. Fans have been flooding social media with heartfelt messages wishing him a speedy recovery.

Exit mobile version