பிரபல நடிகை பிரகதி மகாவடி தமிழில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆனால் ஏற்கனவே இவர் ஹீரோயினாகவும் குணசத்திர நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த பிரபலமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை பிரகதி மகாவடி. 50 வயதை கடந்து விட்டாலும் தற்போது கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தக்கூடிய ஒரு நபர்.
மட்டுமில்லாமல் தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரகதி மகாவடி.
சமீபத்திய பேட்டி அவர் ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு காமெடி நடிகர் என்னை ஜாடை காட்டி படுக்கைக்கு அழைத்தார். அவருடைய பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.
அவர் முன்னணி காமெடி நடிகர். அவருடைய உழைப்பை நான் பார்த்திருக்கிறேன். கடினமான உழைப்பாளி. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் என்னை படுக்கைக்கு அழைத்ததும் அவர் மீது இருந்த மரியாதையை எனக்கு போய்விட்டது.
அவர் பெயரை சொல்லி அவருடைய உழைப்பை நான் வீணடிக்க விரும்பவில்லை. தன்னை படுக்கைக்கு அழைத்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்தேன்.
படப்பிடிப்பு முடிந்தது அவரை என்னுடைய கேரவேனுக்குள் அழைத்துச் சென்றேன். உள்ளே போனதும் நீங்கள் படுக்கைக்கு அழைத்தீர்களே.. நான் உங்களிடம் அப்படி நடந்து கொள்ள ஏதாவது தவறான சிக்னல் கொடுத்தேனா..? அல்லது என்னுடைய உடல் மொழி உங்களுக்கு அப்படி தோன்றியதா..? என கேட்டேன்.
அவர் இல்லை என்று கூறினார். நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறான விஷயம், அருவருப்பான விஷயம், சீப்பான விஷயம். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்களை படப்பிடிப்பு தளத்திலேயே அசிங்கப்படுத்தி இருக்க முடியும். ஆனால், உங்களுடைய இமேஜ்.. உங்களுடைய உழைப்பு.., இதெல்லாம் இன்று பெரிய அளவில் இருக்கிறது. அது கெட்டுப் போய் விடக்கூடாது. உங்களுடைய குடும்பம் உங்களை நம்பி இருக்கிறது எனவே உங்களுடைய உழைப்புக்காகவும் உங்களுடைய குடும்பத்திற்காகவும் படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்து இதை உங்களிடம் கூறுகிறேன்.
இனிமேல் என்னிடம் இது போன்ற வேலைகளை வைத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் பிரகதி மகாவடி.
இந்நிலையில் அந்த சீனியர் காமெடி நடிகர் யாராக இருக்கும்..? என்ற விவாதம் இணைய பக்கங்களில் கிளம்பி இருக்கிறது.
Summary in English : In a recent turn of events, actress Pragathi Mahavadi made headlines after she bravely addressed an uncomfortable situation involving a well-known comedy actor. It seems that during a casual interaction, the actor crossed the line and tried to approach her in an indecent manner.