தற்சமயம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் நடத்திய மாநாடுதான் இருந்து வருகிறது.
பெரும்பாலும் அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் முதன்முறையாக அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து ஒரு வருடத்திற்குள்ளாகவே விஜய் மாநாடு நடத்தியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
ஏனெனில் ஒரு மாநாட்டை நிர்வகித்து நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்காக வந்திருந்த போதிலும் கூட அதற்கு தகுந்த அளவில் மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது.
வேண்டும் என்றே செஞ்ச வேலையா?
இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் விஜய் ரசிகர்கள் வந்ததாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் விஜய் பல கட்சிகளை மறைமுகமாக சாடி பேசி இருந்தார்.
இந்த நிலையில் விஜய் இந்த அளவிற்கு மாநாட்டில் பேசுவார் என்பது பலரும் எதிர்பார்க்காத விஷயமாக இருந்தது. அதனால் பலருமே இது குறித்து பேசி வந்தனர். இந்த நிலையில் நடிகர்கள் பலரும் விஜய்க்கு இதற்காக வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
தே.மு.தி.க செய்த வேலை
இந்நிலையில் மாநாடு நடந்த அதே நாள் தே.மு.தி.க கட்சியின் தலைவியான பிரேமலதா விஜயகாந்த் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் முதன்முதலாக விஜயகாந்த் கூட்டிய மாநாடுதான் தமிழகத்தில் பெரிய மாநாடு அந்த மாநாட்டிற்கு 25 லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர் அந்த சாதனையை வேறு யாராலும் முறியடிக்க முடியாது என்று பதிவிட்டு இருந்தார்.
ஏன் குறிப்பிட்டு விஜய் மாநாடு நடக்கும் அதே நாளில் இதை இவர் பதிவிட வேண்டும். ஏனெனில் என்றும் விஜயகாந்துக்கு நிகராக வேறு எந்த நடிகரும் அரசியல் களத்திற்கு வர முடியாது என்று மறைமுகமாக கூறுகிறார் பிரேமலதா என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.