அடி ஒவ்வொன்னும் இடி.. இறங்கி அடிக்கும் விஜய்.. பொறி கலங்கி நிற்கும் முக்கிய தலைகள்..!

Recent speculation has emerged regarding the potential appointment of political strategist Prashanth Kishore to the Tamil Nadu-based TVK Party.

என்னப்பா இது..? என்று செய்வது தெரியாமல் புலம்பி வருகிறார்கள் தமிழ்நாட்டின் முக்கிய தலைகள்.

அந்த அளவுக்கு நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் மிகப்பெரிய பாதிப்பை தமிழக அரசியல் களத்தில் உண்டு பண்ணி இருக்கிறது.

ஆனால், நடிகர் விஜய் இதை எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய அரசியல் பணியில் அடுத்தடுத்த நகர்வுகளை அதிரடியாக செய்து கொண்டே இருக்கிறார்.

prashanth kishore vijay

தன்னுடைய கடைசி படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒரு பக்கம் இருந்தாலும் முழு நேரமும் தன்னுடைய அரசியல் பாதையில் கவனத்தை வைத்து இருக்கிறார் நடிகர் விஜய் என்று தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தேர்தல் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட இருக்கிறார் என்று கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக வெற்றிக்கழகம் கட்சி அறிவிப்புக்கு பின், பிரசாந்த் கிஷோர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் தற்போது வரை என்னை அழைக்கவில்லை. ஒரு வேலை அவர் என்னை அழைத்தால் கண்டிப்பாக அவருடைய கட்சிக்காக நான் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

prashanth kishore vijay

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தி டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழக வெற்றி கழகம் கட்சி குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர்.

அவர் கூறியதாவது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நான் முன்னரே கணித்து வைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட கட்சிகள் கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகளை தங்கள் பக்கம் வைத்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் வருகையால் உடனடியாக அது 70 சதவீதமாக குறையும்.. அடுத்த 10-15 வருடத்தில் திராவிட கட்சிகளின் வாக்கு சதவீதம் 40 சதவீதம் அதற்கும் கீழ் குறைய வாய்ப்பு இருக்கிறது.

அது நடிகர் விஜயின் அரசியல் பயணம் எப்படி இருக்கிறது..? கூட்டணி யாருடன் என்பதை பொறுத்து தான் அமையும் என கூறியிருந்தார்.

prashanth kishore vijay

இந்நிலையில், விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் வியூகம் நிபுணராகவும், பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்திருக்கிறது.

ஏதோ கட்சி ஆரம்பித்தோம்.. லெட்டர் பேடில் அறிக்கை விட்டோம்.. என்று இல்லாமல் நடிகர் விஜய் முழு மூச்சாக தற்போதைய தேர்தல் நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறார் என்பதால், ஏனைய அரசியல் கட்சிகள் விரைவில் தங்களுடைய தேர்தல் பணிகளை தொடங்கி விடுவார்கள் என்று தெரிய வருகிறது.

2026 தேர்தலுக்கு சரியாக இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள காரணத்தினால் நடிகர் விஜய் முன்கூட்டியே தன்னுடைய தேர்தல் வியூக வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

விரைவில் 2026 தேர்தல் களம் சூடு பிடிக்க போகிறது. நடிகர் விஜயின் வருகை தமிழக அரசியல் களத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு தமிழக வெற்றிக்கழக மாநாடு முடிந்த பிறகு தமிழ்நாட்டின் அரசியல் தலைகள் கொடுத்து வரும் பேட்டியை கவனிக்கும்போது தெரிகிறது.

prashanth kishore vijay

நடிகர் விஜயின் மீது எதை சொல்லி மக்களை திசை திருப்ப முடியும்..? என்று குழம்பி இருக்கிறார்கள் எதிர் கட்சியினர். ஏனென்றால், நடிகர் விஜய் இப்போதுதான் அரசியலுக்கே வருகிறார், அவர் மீது ஒரு சினிமா நடிகர் அவர் ஒரு கூத்தாடி என்ற விமர்சனத்தை தவிர வேறு என்ன சொல்ல முடியும்..?

ஆனால், கூத்தாடி என்றால் என்ன உங்களுக்கு இளக்காரமா..? என்று தன்னுடைய முதல் மாநாட்டு மேடையிலேயே அத்தனை பேர் வாயையும் அடைக்க செய்தார் விஜய். இப்போது கிழக்கும் தெரியாமல் வடக்கும் தெரியாமல் பொறி கலங்கி நிற்கிறார்கள் முக்கிய தலைகள்.

Summary in English : Recent developments in the political landscape have generated considerable buzz regarding the potential appointment of renowned political strategist Prashanth Kishore to the Tamil Nadu-based TVK Party. Known for his innovative strategies and successful campaign management, Kishore’s involvement with the TVK Party could signify a strategic shift aimed at enhancing its electoral prospects.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam