பிரபல சீரியல் நடிகை பிரவீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது சமகாலத்தில் திரைப்படங்கள் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து நான் வேதனைப்படுவதாக பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, சினிமா என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே அளவுக்கு சிறு குழந்தைகள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நான் என்னுடைய குழந்தை பருவத்தில் ஹீரோ என்று பார்த்த விஷயங்கள் என்றால் கார்ட்டூன் காட்சிகள் தான். காமிக் புத்தகங்களில் வரக்கூடிய சின்ன சின்ன கதாபாத்திரங்கள்.. பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.. யாராவது கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும்.. வழியில் ஒரு பூனைக்குட்டி அடிபட்டிருந்தால் அதனை காப்பாற்ற வேண்டும்..
குப்பை போடக்கூடாது.. நீர்நிலைகளை அசுத்தப்படுத்தக் கூடாது.. இப்படி எல்லாம் இருப்பவர்களை தான் அந்த காமிக் கதாபாத்திரங்களில் ஹீரோவாக காட்டுவார்கள்.
அதை பார்த்து நாமும் அது போல செய்யக்கூடாது என்று நாம் நாமும் அந்த ஹீரோ போல பிறருக்கு உதவ வேண்டும் பொது இடங்களில் குப்பை போடக்கூடாது. நீர் நிலைகளை அசுத்தப்படுத்தக் கூடாது. இது எல்லாம் கேட்டு வளர்ந்தோம்.
ஆனால் இன்று இருக்கக்கூடிய சினிமாவில் ஹீரோக்கள் என்ன செய்கிறார்களோ.. அதை அப்படியே குழந்தைகள் செய்கிறார்கள்.. ஹீரோக்கள் பயன்படுத்தக்கூடிய ஆடை போலவே இவர்களும் ஆடை போட்டுக் கொள்வது.. அவர்கள் பயன்படுத்தக்கூடிய சின்ன சின்ன ஸ்டைலிஷ் பொருட்களை கவனித்து அதே போல வாங்கி வைத்துக் கொள்வது..
மறுபக்கம் இளைஞர்கள் ஹீரோ என்னென்ன பழக்கம் வைத்திருக்கிறாரோ..? அந்த பழக்கத்தை எல்லாம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அதை ஹீரோயிசம் என்று நினைத்துக் கொள்வது.. இதெல்லாம் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ரொம்ப கொடுமை படுத்துறாங்க.
ஆனால், நானும் இந்த சினிமா துறையில் தான் இருக்கிறேன். நல்ல நல்ல படங்களும் வருகின்றன. நல்ல கருத்துக்கள் நிறைந்த படங்களும் வருகின்றன. ஆனால், பொதுவாக குழந்தைகள் எதைப்பார்த்து வளர்கிறார்கள்.. என்பதை நாம் தீவிரமாக கவனிக்க வேண்டி இருக்கிறது என பேசியிருக்கிறார் நடிகை பிரவீனா.
இவருடைய இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.