55 நாள் என்ன வெச்சு செஞ்சாங்க.. ஆனா பிரியா பவானி ஷங்கர் உடைத்த உண்மை!!..

சின்னத்திரைகளிலிருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நட்சத்திரங்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்தவர் பிரியா பவானி ஷங்கர் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தற்போது தொலைக்காட்சி மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடிகையாக மாறி முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற வேளையில் இவர் கூறிய விஷயம் இணையம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

55 நாள் ஷூட்டிங் வெச்சு செஞ்சாங்க..

தமிழ் திரை உலகில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவரது முதல் படமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

இதனை அடுத்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்த மட்டுமல்லாமல் அண்மையில் இந்தியன் 2, டிமன் காலனி 2 போன்ற படங்களில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

மேலும் கடந்த வாரம் வெளிவந்த பிளாக் திரைப்படம் சிறப்பாக ஓடி வருவதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய பேச்சு வைரலாகி உள்ளது.

இதற்கு காரணம் இவர் ஒரு மிகப்பெரிய ஹீரோவின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் 55 நாட்கள் ஷூட்டிங்கிற்கு தொடர்ந்து சென்று இருக்கிறார்.

ஆனா பிரியா பவானி சங்கர் உடைத்த உண்மை..

அப்படி தொடர்ந்து சூட்டிங் சென்று நடித்து வந்த பிரியா பவானி ஷங்கர் 55 நாள் ஷூட்டிங்கில் வெயில் மழை என எதையும் பார்க்காமல் கடுமையான உழைப்பின் மூலம் அந்த படத்தை முடித்துக் கொடுத்த நிலையில் டப்பிங் போய் பார்த்தால் அரை நாள் நடித்தது மட்டும் தான் அங்கு இருந்தது.

இதனை அடுத்து படக்குழுவின் இடம் என்னிடம் சொன்ன கதை என்ன? இங்கே என்ன இருக்கிறது என்ன வைத்து ஷூட் செய்ததெல்லாம் எங்கே என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர்கள் சற்றும் தயங்காமல் அதெல்லாம் மியூசிக்கல வரும் பாருங்க என்று கூலாக பதிலளித்ததை கேட்டு கடுப்பாகிப் போன அவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லி இருக்கிறார்.

அத்தோடு படிக்கிறது கேட்கிறது நடிப்பது என்று எல்லாமே ஸ்கிரீனில் வரும் என்று சொல்ல முடியாது என்பதற்கு இதுவே உதாரணமாக அமைந்த காரணத்தால் என் மனது பொறுக்காமல் ஹீரோவிற்கு கால் செய்து இந்த விஷயத்தைப் பற்றி கேட்ட போது நான் 135 நாள் சூட்டுக்கு போனேன் என் சீனே இல்லை என்ற குண்டை தூக்கி போட்டார்.

அதை கேட்ட பிறகு பிரியா பவானி ஷங்கர் இப்படியெல்லாம் நடக்கிறதே என்று மனதளவில் நொந்து கொண்டதோடு இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam