55 நாள் அதை பண்ணுனார்.. என்னை நல்லா ஏமாத்திட்டாங்க..! தனுஷ் குறித்து உண்மையை கூறிய பிரியா பவானி சங்கர்…

தற்சமயம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பெற்று வரும் நடிகையாக நடிகை பிரியா பவானி சங்கர் இருந்து வருகிறார். பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

அதற்கு பிறகு நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் இந்த நிலையில் தாமதமாகதான் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

55 நாள் அதை பண்ணுனார்

மேயாத மான் திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக மாறினார் நடிகை பிரியா பவானி சங்கர். ஆனால் சமீபகாலமாக நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்பாக நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆரம்பத்தில் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தாலும் சமீபகாலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அதிகமாக தோல்வியை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

என்னை நல்லா ஏமாத்திட்டாங்க

இயக்குனர் ஹரி இயக்கிய யானை, ரத்னம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்தார். அந்த இரண்டு திரைப்படங்களுமே பெரும் தோல்வியை கண்டன. அதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகயாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படமும் கூட தோல்வியை கண்டது இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுக்கள் வரத் துவங்கின இதற்கு பல பேட்டிகளில் பதில் அளித்து வந்தார் பிரியா பவானி சங்கர் இதற்கு நடுவே சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் ஏமாற்றப்பட்டது குறித்து பிரியா பவானி சங்கர் கூறியிருந்தார்.

உண்மையை கூறிய பிரியா பவானி சங்கர்

ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியாக நடிப்பதற்காக என்னை அழைத்து இருந்தார்கள். அந்த திரைப்படத்திற்கு எனக்கு 55 நாள் கால் சீட் கொடுக்கப்பட்டது. நிறைய காட்சிகள் என்னை வைத்து படம்பிடித்தார்கள் கிட்டத்தட்ட படத்தில் அதிகமாக நான் வருவேன் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் டப்பிங் செய்வதற்கு சென்ற பொழுது எனக்கான காட்சிகள் மிக மிக கம்மியாக இருந்தது. நான் என்ன இவ்வளவு குறைவாக காட்சிகள் இருக்கிறது என்று கேட்ட பொழுது இதில் ஒரு பாடல் இருக்கிறது அதில் உங்களுக்கு காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று கூறினார்கள்.

நான் மிகவும் விரக்தி அடைந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். ரசிகர்கள் கூறும் பொழுது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தான் ப்ரியா பவானி சங்கர் கூறுகிறார் என்று கூறுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version