இவங்கதான் என்னை கவர்ச்சியா நடிக்க விடுறதில்ல.. இதுதான் காரணம்.. குண்டை தூக்கி போட்ட பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கரை பொருத்தவரை எப்போதுமே நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவராக இவர் இருந்து வருகிறார்.

வழக்கமாக நடிகைகள் வாய்ப்புகள் கிடைத்தால் போதும் என்று எல்லா திரைப்படத்துக்களிலும் எல்லா திரைப்படங்களிலும் வாய்ப்புகள் பெற்று நடித்து வருவார்கள். ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியமான இடம் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன் என்கிற கொள்கையோடு இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

கவர்ச்சியா நடிக்க விடுறதில்ல

அதனாலேயே அவர் நடிக்கும் திரைப்படங்கள் குறைவானதாக இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் படங்களாக அவை இருந்து வருகின்றன. ஏனெனில் பிரியா பவானி சங்கர் நடித்த முதல் திரைப்படமான மேயாத மான் திரைப்படமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாக இருந்தது.

 

அதனாலேயே அதற்கு பிறகு அவர் நடித்த மான்ஸ்டர் மாதிரியான அதிகபட்ச படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பது போல கதைக்களம் இருப்பதை பார்க்க முடியும்.

சமீப காலமாக மட்டும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து ஒரு தோல்வி கதாநாயகியாக அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தார். அதற்கு முக்கிய காரணம் வரிசையாக அவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியை கொடுத்து வந்தன.

இதுதான் காரணம்

நடிகர் விஷால் நடித்து இயக்குனர் ஹரி இயக்கி வெளியான ரத்தினம் திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதற்குப் பிறகு பிரியா பவானி சங்கர் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படமும் பெரிதாக வெற்றியை பெறவில்லை இந்த நிலையில் இந்த விஷயங்கள் எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில் அடுத்து பிரியா பவானி சங்கர் டிமான்டி காலனி 2 திரைப்படம் மூலமாக நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறார்.

குண்டை தூக்கி போட்ட பிரியா பவானி ஷங்கர்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசிய ப்ரியா பவானி சங்கர் கூறும் பொழுது நான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. ஆனால் என்னுடைய ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நான் இப்படி நடிப்பது தான் பிடித்திருக்கிறது.

மேலும் என்னை போல நடிப்பதை விடவும் கவர்ச்சியாக நடிப்பதுதான் மிகவும் கடினம். எனக்கு அப்படி நடிக்க வராது என்று தான் கூற வேண்டும் மேலும் எனது ரசிகர்களும் அதை எதிர்பார்ப்பது கிடையாது. அவர்களே நான் கவர்ச்சியாக நடித்தால் பார்க்க மாட்டார்கள். அதனால்தான் நான் கவர்ச்சியாக நடிப்பது கிடையாது என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam