“படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் அது இருக்கும்..” முன்னணி இயக்குனர் குறித்து கதறும் பிரியா பவானி சங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது தான் தவறவிட்ட மூன்று படங்களை குறித்து தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார்.

அவர் கூறியதாவது ஒரு பிரபல இயக்குனர் அவரிடம் எனக்கு மூன்று பட வாய்ப்புகள் கிடைத்தன. அவரிடம் என்ன கூறினார் என்றால்.. மூன்று படங்களில் உன்னை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்கிறேன் என கூறினார்.

அதில் அவர் சொன்ன மூன்றாவது கதையில்தான் ஹீரோயினுக்கான ஸ்கோப் அதிகமாக இருந்தது. மற்ற இரண்டு படங்களும் பெரிய படங்கள் என்றாலும் அதில் ஹீரோயினுக்கு வேலையே கிடையாது.

அதனால் அந்த இரண்டு படங்களும் வேண்டாம் நான் மூன்றாவது படத்தில் மட்டும் நடிக்கிறேன் என சொன்னேன். ஆனால், இல்லை இல்லை இது வந்து ஒரு காம்போ ஆஃபர்.

மூன்று படத்திலும் நீங்கள் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தால் ஓகே. இல்லை, ஒரே படத்தில் தான் நடிப்பேன் என்றால் எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்காது என கூறினார்.

மேலும் அந்த இரண்டு படங்களிலும் ஹீரோயினுக்கு வேலையே இல்லை என்றாலும் படம் வெளியான பிறகு இரண்டு நாட்கள் அது பற்றி பேசுவார்கள். ஆனால் படம் வெளியாகும் வரை இந்த படத்தின் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்ற செய்தி உங்களின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

உங்களுடைய திரைப்பயணத்தில் திருப்புமுனையாக இருக்கும் என கூறினார். ஆனால், அப்போது எனக்கு அது புரியவில்லை. அதனால் அவர்கள் கொடுத்த அந்த மூன்று பட வாய்ப்புகளும் நான் தவற விட்டு விட்டேன்.

அப்போது எனக்கு இருந்த புரிதல் அதுதான். ஆனால், இப்போது எனக்கு விஷயம் புரிகிறது. அதனை நான் தவற விட்டு இருக்க கூடாது என்று நான் நினைக்கிறேன்.

அந்தப் அந்த இரண்டு படங்களும் பெரிய படங்கள் என்றாலும் ஹீரோயினுக்கு அந்த படத்தில் வேலையே இல்லை என்றாலும் கூட அந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்ற ஒரு அந்த ஒரு அறிமுகம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும்.

ஆனால். அதனை நான் தவற விட்டு விட்டேன் என பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

Summary in English : Actress Priya Bhavani Shankar recently opened up about a decision she wishes she could take back. In a candid interview, she revealed that she turned down three movie offers from a leading director, and it’s safe to say she has some regrets about it.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam