நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி இருந்தால் அவனை எல்லோரும் மதிப்பார்கள் என்று பேசியுள்ளார். இந்த விவகராம் சர்ச்சையை கிளப்பியுள்ளார். மட்டுமில்லாமல் பல்வேறு விவாதங்களை கிளப்பி உள்ளது.
இந்திய சினிமா உலகில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் பிரபலமான ஒரு நடிகை, தயாரிப்பாளர் மற்றும் பாடகி. இவர் தனது அழகு, திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா 1982-ம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவரும், தாய் ஒரு முன்னாள் விமானப் பணிப்பெண்ணும் ஆவார்.
2000-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தார்.மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்ற பிறகு, தமிழ் திரைப்படமான ‘தமிழன்’ மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.
ஹாலிவுட்டில் ‘குவான்டிக்கோ’ என்ற தொடரில் நடித்து பெரும் வெற்றியைப் பெற்றார். இதன் மூலம் உலகளாவிய அளவில் பிரபலமானார். இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தனது நடிப்புத் திறமைக்காக தேசிய விருது பெற்றுள்ளார். பல முறை பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளார்.உலகளாவிய அளவில் பல விருதுகளை வென்றுள்ளார்.
யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பெண்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகை, தயாரிப்பாளர், பாடகி என பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தனது வெற்றிக்கு கடின உழைப்பு மிக முக்கிய காரணம் என்று அடிக்கடி கூறுவார்.
எந்த சூழலிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார். இந்தியாவை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இந்நிலையில், ஆண்கள் எப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அவர் கூறியதாவது, ஆண்கள் உடல் பெண்களை கவர்வது இல்லை.
ஒரு ஆண் மாதத்திற்கு இரண்டு முறை முடி வெட்டி கொள்ள வேண்டும். ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்றார் போல ஆடைகளை அணிய வேண்டும். அவர்களுடைய நறுமணம் நன்றாக இருக்க வேண்டும். மெதுவாக பேச வேண்டும். முக்கியமாக அனாவசியமாக சிரிக்க கூடாது.. எப்போது தேவையோ அந்த இடத்தில் மட்டும் தான் சிரிக்க வேண்டும். இப்படி இருக்கும் பொழுது எல்லோருமே அந்த ஆண் மகனை எல்லோரும் மரியாதையுடன் பார்ப்பார்கள் என கூறியிருக்கிறார்.
இதை கேட்ட ரசிகர்கள், இதுவே ஒரு நடிகர் ஒரு பெண்.. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய கருத்தை கூற முடியுமா..? ஒருவேளை கூறினால், அவரை ஆணாதிக்கவாதி.. அவர்களின் பார்வை தான் கோளாறு.. நீங்கள் ஏன் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்.. என்று பெரிய களேபரமே நடக்கும். ஆனால், நடிகை பிரியங்கா சோப்ரா.. ஆண்கள் இப்படித்தான் இருக்கணும் என வகுப்பே எடுக்கிறார்.. ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள்.. இது தான் ஆண்களின் உண்மையான அழகு என விவாதங்கள் கிளம்பியுள்ளது.