நல்ல வேளை நம்ம தப்பிச்சிட்டோம்.. வேட்டையன் சிக்கிடுச்சு.. வாயை விட்ட பிரபலம். லீக் ஆன ஆடியோ..!

கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்சமயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது வேட்டையன் திரைப்படம். வெளியான நான்கு நாட்களிலேயே 250 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது வேட்டையன் திரைப்படம்.

வேட்டையன் திரைப்படத்தை பொருத்தவரை விஜய்யின் கோட் திரைப்படத்தை விட இந்த படத்தின் பட்ஜெட் குறைவுதான் 250 கோடிதான் படத்தின் மொத்த பட்ஜெட்டே என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சேட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் மூலமாகவே முக்கால்வாசி தயாரிப்பு தொகையை பெற்று விட்டனர் லைகா நிறுவனத்தினர்.

நல்ல வேளை நம்ம தப்பிச்சிட்டோம்

இந்த நிலையில் தற்சமயம் படம் ஓடி வருகிற வசூல் அவர்களுக்கு லாபம்தான் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் முதல் 5 நாளிலேயே இவ்வளவு வசூல் கொடுத்ததால் கண்டிப்பாக இந்த படம் எப்படியும் ஒரு 400 இருந்து 500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான போலீஸ் கதைகளிலிருந்து மாறுபட்ட ஒரு திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருக்கிறது. அப்படியும் கூட வேட்டையன் திரைப்படம் திட்டமிட்டு வசூல் குறைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

வேட்டையன் சிக்கிடுச்சு

இந்த நிலையில் இது போதாது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் இதுகுறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான கங்குவா திரைப்படம்தான் வெளியாக இருந்தது.

ஆனால் வேட்டையன் திரைப்படம் அன்று வெளியாகும் காரணத்தினால் ஞானவேல் ராஜா கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி வைத்தா. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் வெளியான பிறகு புயல் காரணமாக தொடர்ந்து பல இடங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாயை விட்ட தயாரிப்பாளர்

மழை பெய்து வரும் காரணத்தினால் நிறைய திரையரங்குகளுக்கு ரசிகர்கள்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு படம் வெளியாகி முதல் வாரம் என்பது மிக முக்கியமானதாகும். ஆனால் முதல் வாரத்திலேயே வேட்டையன் திரைப்படம் இந்த மாதிரியான மழை காரணமாக வசூல் குறைந்து இருக்கிறது.

இது குறித்து யாரிடமோ போனில் பேசிய ஞானவேல் ராஜா நல்ல வேலை நமது படம் இந்த நேரத்தில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் என்று கூறி இருக்கிறார். இது அதிக சர்ச்சையை ஏற்படுத்த துவங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்த ஞானவேல் ராஜா நான் வேட்டையன் திரைப்படத்தை குறிப்பிட்டு கூறவில்லை. எந்த திரைப்படம் இப்பொழுது வெளியாகி இருந்தாலும் அதன் நிலைமை மோசமாக தான் இருந்திருக்கும் என்று பொதுவாக தான் கூறினேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version